நம்ம மதுரை மக்களுக்கு இனி ஜாலியா ஜாலி தான்.அசத்தும் BSNL.

நம்ம  மதுரை மக்களுக்கு இனி ஜாலியா ஜாலி தான்.அசத்தும் BSNL.
HIGHLIGHTS

மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட 139 பேஸ் டவர்கள் வழியாக 4ஜி சேவை மக்களுக்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார் மதுரை BSNL பொது மேலாளர் ராஜம். மதுரையில் இருக்கும்

BSNL  நிறுவனம்  தற்பொழுது இந்தியாவில் இருக்கும் அனைத்து  இடங்களுக்கும், 4G  சேவையை வழங்கி வந்த நிலையில் தமிழ் நாட்டில் மட்டும்  ஒரு சில இடத்தில் 4G  நெட்வர்க்கை கிடைக்கவில்லை  என்று பல இடத்தில்  புகார் வந்த  வகையில் இருக்கிறது.மேலும்  4G  நெட்வர்க் அனைத்து இடங்களுக்கும் கிடைக்கும் வகையில் அரசு நிறுவனமான BSNL நம் மதுரை வாசிகளுக்காக 4G  சேவையை கொண்டுவந்துள்ளது.மேலும் BSNL யின் தற்போதய குறிக்கோள் என்று பார்த்தால்  அனைத்து வட்டாரங்களிலும் 4G  சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் கோவை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு 4ஜி சேவையை வழங்கி வரும் BSNL  நிறுவனம் தற்பொழுது மதுரை மாவட்டத்திலும் 4ஜி  சேவையயை  கொண்டு வந்தது மகிழ்ச்சியே  அளிக்கிறது. மேலும் அனைவருக்கும்  இன்டர்நெட் அதிவேகமாக கிடைக்க வேண்டும்.

மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட 139 பேஸ் டவர்கள் வழியாக 4ஜி சேவை மக்களுக்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார் மதுரை BSNL பொது மேலாளர் ராஜம். மதுரையில் இருக்கும்  BSNL வாடிக்கையாளர்கள் தங்களின் 3ஜி சிம்மை மாற்றி 4ஜி சிம்மை பெற்றால் மட்டுமே இந்த சேவைகளை தொடர்ந்து பெற முடியும். மதுரை மண்டலத்தில் வரும் வருமான வகை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 2ஜி வாடிக்கையாளர் எந்த வகையான பிரச்சனையும் இன்றி தங்களின் பயன்பாட்டை தொடர முடியும்..

தல்லாகுளம், கிழக்கு மாசி வீதி, வடக்கு சித்திரை வீதி, எல்லிஸ் நகர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் BSNL . சேவை மையங்களில் 4ஜி சிம்கார்ட்களை பெற்றுக் கொள்ளலாம். 0452-255-0000 BSNL சேவைகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் இந்த நம்பருக்கு அழைத்து பேசிக்கொள்ளலாம். இதன் வேகம் 3.5 MBPS டவுன்லோட் போதும், பதிவேற்றத்தின் போது வேகம் 10 முதல் 12 MBPS ஆக இருக்கும்.

3ஜி சேவையை பயன்படுத்தும் 68 ஆயிரம் வாடிக்கையாளர்களில் 38 ஆயிரம் நபர்களே 4ஜி சிம்களுக்கு அப்டேட் ஆகியுள்ளனர். அவர்கள் நெட்வொர்க் ஃப்ளக்சுவேசனை எதிர் கொள்வதை தடுக்க முன்பே SMSகள் மற்றும் கால்கள் மூலமாக தகவல்கள் அளிக்கப்பட்டுவிட்டது. 4ஜி சேவைகளுக்கான டேரிஃபில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் மதுரை மாவட்டத்திற்கு வெளியே இருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை மதுரையில் பெற வேண்டும் என்றால் நிச்சயமாக 4ஜி சிம்களை பெற வேண்டும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo