BSNL சென்னை கஸ்டமர்களுக்கு குட் நியூஸ் eSIM சேவை இனி வெளிநாட்டில் இருக்கும் உங்கள் உறவினருக்கு ஜாலியா பெசாலம்

HIGHLIGHTS

BSNL நிறுவனம் சென்னை மக்களுக்காக ஒரு மாடர்ன் சேவையை கொண்டு வந்துள்ளது

eSIM சேவைகளை அதன் லோக்கல் சப்ஸ்க்ரைபர்களுக்காக கொண்டுவந்துள்ளது

BSNL சென்னை டெலிபோன்ஸ் தனது சேவைகளை நவீனமயமாக்க நகர்கிறது

BSNL சென்னை கஸ்டமர்களுக்கு குட் நியூஸ் eSIM சேவை இனி வெளிநாட்டில் இருக்கும் உங்கள் உறவினருக்கு ஜாலியா பெசாலம்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL நிறுவனம் சென்னை மக்களுக்காக ஒரு மாடர்ன் சேவையை கொண்டு வந்துள்ளது, அதாவது eSIM சேவைகளை அதன் சப்ஸ்க்ரைபர்களுக்காக கொண்டுவந்துள்ளது StarHub சிங்கப்பூருடன் இணைந்து LTE இல் சர்வதேச ப்ரீபெய்ட் ரோமிங்கை அறிமுகப்படுத்துதல் ஆகிய இரண்டு குறிப்பிடத்தக்க வெளியீடுகளுடன் BSNL சென்னை டெலிபோன்ஸ் தனது சேவைகளை நவீனமயமாக்க நகர்கிறது. இந்திய டெலிகாம் துறை டிஜிட்டல்-முதல் தீர்வுகளை நோக்கி மாறும்போது, ​​போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற அரசு நடத்தும் ஆபரேட்டரின் நோக்கத்தை இரண்டு முன்னேற்றங்களும் சுட்டிக்காட்டுகின்றன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சென்னை மக்களுக்கு eSIM சேவை

BSNL eSIM சேவை இப்பொழுது சென்னை கஸ்டமர்களுக்கு கொண்டு வந்துள்ளது, இது இப்பொழுது உங்களுன் போனில் சப்போர்ட் செய்யும் eSIM எக்டிவேஷன் செய்வது ரொம்ப சுலபம் மற்றும் இதில் ஒரு டிவைசில் மல்ட்டிபல் ப்ரோபைல் பயன்படுத்தலாம் .

BSNL eSIM சேவையானது இப்பொழுது சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது மேலும் அதில் “No SIM, No Limits என குறிபிடப்பட்டுள்ளது அதாவது மல்ட்டிபல் ஆப்பரேட்டர் பயன்படுத்தலாம். இந்த சேவை, ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட உலகளாவிய சகாக்களுடன் BSNL ஐ நிலைநிறுத்துகிறது. வாடிக்கையாளர்கள் BSNL யின் கஸ்டமர் சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது நிறுவனத்தின் உதவி நம்பரை அழைப்பதன் மூலமாகவோ இந்த வசதியை செயல்படுத்தலாம்.

இதையும் படிங்க:BSNL 4G Launch: வெற்றிகரமாக அறிமுகமான 4ஜி சேவை இனி நெட்வொர்க் பிரச்சனை நோ டென்ஷன்

சிங்கபூர் StarHub ரோமிங்

ஆகஸ்ட் 4, 2025.அன்று சிங்கப்பூர் ஸ்டார்ஹப் நெட்வொர்க் உடன் சேர்ந்து BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரோமிங் சேவையை அறிவித்துள்ளது இந்த சேவையானது சென்னை கஸ்டமர்கள் வெளிநாடு செல்லும்போது டேட்டா மற்றும் SMS யில் எந்த ஒரு இடையுறு இல்லாமல் இருக்கலாம் அதவது சென்னை கஸ்டமர்கள் சிங்கப்பூர் கால் செய்யும்போது நெட்வொர்க் ஸ்மூத்தாக செயல்படும்.

அவுட்கோயிங் ஒரு மெசேஜுக்கு ரூ.7.95 கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இன்கம்மிங் மெசேஜ் இலவசம். 10 KBக்கு ரூ.0.0037 டேட்டா வசூலிக்கப்படும். இருப்பினும், VoLTE சேவைகள் சோதனையில் உள்ளன, இன்னும் கிடைக்கவில்லை.

ரோமிங் சேவையைப் பயன்படுத்த, கஸ்டமர்கள் புதிய சர்வதேச ரோமிங் இரட்டை IMSI சிம்மிற்கு மாறி, STV IR57 (30 நாட்களுக்கு வேலிடிட்டியாகும் ) அல்லது STV IR167 (90 நாட்களுக்கு வேலிடிட்டி) ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo