bsnl
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ஒரு சிறப்பு ஆல்-இன்-ஒன் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், அதிக டேட்டா மற்றும் நீண்ட நாள் வேலிடிட்டி நன்மையுடன் வருகிறது, இந்தத் திட்டத்தின் விலை ரூ,599 ஆகும். இந்தத் திட்டத்தின் அனைத்து நன்மைகளையும் தெளிவாக பார்ப்போம்.
BSNL வழங்கும் இந்த ஆல்-இன்-ஒன் திட்டத்தின் விலை ரூ,599 ஆகும், ஆனால் இதன் பலன்கள் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு இணையானவை. நீங்கள் உங்கள் போனை மிகவும் அதிகமாக பயன்படுத்துபவராக இருந்தால், இந்தத் திட்டம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் , இதில் கஸ்டமர்களுக்கு தினமும் 3GB அதிவேக டேட்டாவைப் வழங்குகிறது. தினசரி 3GB டேட்டா லிமிட் முடிந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைக்கப்படும்.
For the ones who don’t just use their phone-they live on it.
— BSNL India (@BSNLCorporate) July 10, 2026
From endless scrolling and streaming to work, gaming, and staying connected, your day deserves a recharge that never falls behind.
Recharge smart with #BReX https://t.co/41wNbHpQ5c#BSNLIndia #StayConnected… pic.twitter.com/05btTtPmAS
டேட்டாவுடன் கூடுதலாக, இந்த BSNL ப்ரீபெய்ட் திட்டம், நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வொயிஸ் கால்களை கஸ்டமர்களுக்கு வழங்குகிறது. மேலும், இந்தத் திட்டம் தினமும் 100 இலவச SMS மெசேஜ்களை வழங்குகிறது.
நிறுவனத்தின் இந்த ஆல்-இன்-ஒன் திட்டம் ஒரு மாதம் மட்டுமல்ல, 70 நாட்கள் செல்லுபடியாகும். இது அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொந்தரவிலிருந்தும் உங்களை விடுவிக்கும்.
இதையும் படிங்க:BSNL அறிமுகம் செய்த சேட்லைட் போன், iphone விலையை மிஞ்சியது அப்படி என்ன இருக்கு இதுல
நீங்கள் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் அதிக வேலிடிட்டி அதாவது முழுசா 70 நாட்கள் வேலிடிட்டி பெறலாம், இதை தவிர அன்லிமிடெட் காலிங், அன்லிமிடெட் டேட்டா போன்ற பல நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தை ரீச்சராஜ் செய்வதன் மூலம் ஒரு 3 மணி நேரம் வரை ரீசார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் மேலும் இந்த திட்டத்தை அதன் அதிகாரபூர்வ ஆப் அல்லது வெப்சைட் மூலம் ரீச்சார்ஜ் செய்யலாம்