அதிகபட்ச 4G டேட்டா கொண்ட ரீச்சார்ஜ் பிளானில் எது பெஸ்ட் ?

அதிகபட்ச 4G  டேட்டா கொண்ட ரீச்சார்ஜ் பிளானில் எது பெஸ்ட் ?
HIGHLIGHTS

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் சராசரி மொபைல் டேட்டா அதி வேகமாக வளர்ந்துள்ளது

பயனர்கள் ஒரு மாதத்தில் 100 பில்லியன் ஜிபி டேட்டாவை உட்கொண்டுள்ளனர்.

அதிக டேட்டா கொண்ட திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த அறிக்கை உங்களுக்கானது.

கடந்த  சில ஆண்டுகளில் இந்தியாவில் சராசரி  மொபைல் டேட்டா அதி வேகமாக வளர்ந்துள்ளது, ஜியோவின் சமீபத்திய அறிக்கையின்படி, நெட்வொர்க்கில் உள்ள பயனர்கள் ஒரு மாதத்தில் 100 பில்லியன் ஜிபி டேட்டாவை உட்கொண்டுள்ளனர். நீங்கள் நிறைய வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்தால், கேம்களை விளையாடினால் அல்லது மணிக்கணக்கில் இசையைக் கேட்டால், 2ஜிபி மொபைல் டேட்டா உங்களுக்குப் போதுமானதாக இருக்காது. அதிக டேட்டா கொண்ட திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த அறிக்கை உங்களுக்கானது. 

Reliance Jio

ரிலையன்ஸ் ஜியோவின் அதிகபட்ச டேட்டா திட்டத்தைப் பற்றி பேசுகையில், ஜியோ 2.5 ஜிபி டேட்டாவுடன் மூன்று திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த ரீசார்ஜ் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS உடன் வருகிறது. JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான இலவச அக்சஸ் இந்தத் திட்டங்களுடன் கிடைக்கிறது. ஜியோவின் மலிவான 2.5ஜிபி டேட்டா திட்டம் ரூ.349. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஜியோவின் ரூ.899 திட்டமானது 90 நாட்களையும், ரூ.2,023 திட்டமானது 252 நாட்களுக்கான வேலிடிட்டியையும் வழங்குகிறது.

Airtel

நீங்கள் ஏர்டெல்லின் வாடிக்கையாளராக இருந்தால் அதிக நன்மைகளைப் வழங்குகிறது. ஏர்டெல் 3 ஜிபி டேட்டா மற்றும் 2.5 ஜிபி கொண்ட பல திட்டங்களை கொண்டுள்ளது. இந்த திட்டங்களில் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இது மட்டுமின்றி, 3 மாதங்களுக்கு Apollo 24|7 வட்ட மெம்பர், இலவச Hello Tune, Wynk Music மற்றும் Airtel Xstream செயலிக்கான இலவச அணுகலும் இந்த திட்டங்களில் கிடைக்கும்.

மூன்று மாதங்களுக்கு குறைந்த விலை திட்டத்தைப் பற்றி பேசுகையில், ஏர்டெல் ரூ.999 திட்டத்தில் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டியாகும் காலம் 82 நாட்கள். அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் திட்டத்துடன் 3 மாதங்களுக்கு கிடைக்கிறது. மறுபுறம், இந்த அனைத்து அம்சங்களுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், நீங்கள் ரூ.3,359 திட்டத்தைப் பெறலாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டியாகும் காலம் 365 நாட்களுக்கு கிடைக்கும் மற்றும் அதனுடன் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

நீங்கள் கூடுதல் டேட்டா விரும்பினால், ரூ.399 திட்டத்தில் ஒரு நாளைக்கு 3ஜிபி மொபைல் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் உங்களுக்கு சிறந்தது. இதன் வேலிடிட்டியாகும் காலம் 28 நாட்கள். ரூ.499 திட்டமானது 3ஜிபி டேட்டாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத சந்தாவுடன் வருகிறது. அடுத்த திட்டம் ரூ.699, இது ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா, அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் மற்றும் 56 நாட்களுக்கு வெளிடிடியாகும்..

Vodafone Idea

வோடபோன் ஐடியாவின் மிக உயர்ந்த தரவுத் திட்டங்களைப் பற்றி பேசுகையில், Vi 2.5 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களைக் கொண்டுள்ளது. ஒரு மாத திட்டத்தைப் பற்றி பேசினால், அதன் விலை 359 ரூபாய். இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, அன்லிமிடேட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். மறுபுறம், நீங்கள் இரண்டு மாத திட்டத்தைத் பார்க்கிறீர்கள் என்றால், ரூ.699 திட்டமே உங்களுக்குச் சிறந்தது. இந்த திட்டத்தில், ரூ.359 திட்டம் போன்ற வசதிகள் உள்ளன. இதன் வேலிடிட்டி 56 நாட்களுக்கு கிடைக்கும். ரூ. 475 திட்டம் 28 நாட்களுக்கு வேலிடிட்டியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 4 ஜிபி மொபைல் டேட்டாவுடன் வரும் பட்டியலில் உள்ள ஒரே திட்டமாகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo