Airtel யின் புதிய திட்டம் அறிமுகம் JioHotstar நன்மையுடன் அன்லிமிடெட் 5G டேட்டா இலவசம்

Airtel யின் புதிய திட்டம் அறிமுகம் JioHotstar நன்மையுடன் அன்லிமிடெட் 5G டேட்டா இலவசம்

இந்தியாவின் இரண்டாவது டெலிகாம் நிறுவனமான Airtel அதன் கஸ்டமர்களுக்கு 2 புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு ஆகும் . மேலும் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 5G டேட்டா நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த ரீச்சார்ஜ் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு jioHotstar சப்ஸ்க்ரிப்சன் நன்மை வழங்கபடுகிறது, புதிய ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் இணையத்தில் அதிக நேரம் செலவிடும் பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel ரூ,388 ரீச்சார்ஜ் திட்டம்.

ஏர்டெல்லின் புதிய ரீசார்ஜில் முதல் திட்டம் ரூ.398 ஆகும். இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் , இதன் மூலம் கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல் , STD மற்றும் ரோமிங் கால்களை அனுபவிக்க முடியும். தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம். நிறுவனம் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் வழங்குகிறது,

இது உங்கள் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் தொடங்கும். நிறுவனத்தின் 5G நெட்வொர்க் பகுதியில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே அன்லிமிடெட் 5G டேட்டா கிடைக்கும். இதனுடன், பயனர்களுக்கு 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படும். இந்த சந்தா மூலம், மக்கள் விளையாட்டு, திரைப்படங்கள் போன்றவற்றை நேரடியாகப் பார்க்க முடியும். ஐபிஎல் போட்டிகளையும் நீங்கள் ரசிக்க முடியும். பயனர்கள் இலவச ஹலோ டியூன் மற்றும் ஸ்பேம் கால்களின் நேரடி அலர்ட் பெறுவார்கள். நிறுவனம் இன்னும் பல ரீசார்ஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Airtel ரூ,409 திட்டம்.

ஏர்டெல்லின் புதிய ரீசார்ஜில் இரண்டாவது திட்டம் ரூ.409 ஆகும். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும், இதன் மூலம் பயனர் அன்லிமிடெட் லோக்கல் , STD மற்றும் ரோமிங் கால்களை அனுபவிக்க முடியும். தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினமும் 100 SMS அனுப்பலாம். 5 டாக் டைமும் கிடைக்கும்.இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டாவும் வழங்கப்படுகிறது. உங்கள் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இது தொடங்கும். நிறுவனத்தின் 5G நெட்வொர்க் பகுதியில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே வரம்பற்ற 5G டேட்டா கிடைக்கும்.

இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியத்தின் சந்தா வழங்கப்படுகிறது. அந்த சந்தாவுடன் 22க்கும் மேற்பட்ட OTT கன்டென்ட் பார்க்கலாம். பயனர்கள் இலவச ஹலோ டியூன் மற்றும் ஸ்பேம் கால்களின் லைவ் நோட்டிபிகேசன் வழங்குகிறது .

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile