Airtel
நீங்கள் Airtel கஸ்டமராக இருந்தால் அதும் நீங்கள் ரூ,400க்குள் ஒரு மிக சிறந்த காலிங், டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5G போன்ற நன்மை வழங்கும் திட்டத்தை தேடினால் ரூ,379 யில் வரும் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் முழுசா 1 மாத வேலிடிட்டி நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
ஏர்டெல்லின் போர்ட்ஃபோலியோவில் 1 மாத வரை வேலிடிட்டி வழங்குகிறது பல மாதாந்திர திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் ஒன்று நிறுவனத்தின் ரூ. 379 திட்டம். இந்த திட்டம் ஒரு முழு மாத வேலிடிட்டியாகும் . அதாவது, ஜனவரி 5 ஆம் தேதி இன்று இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்கள் அடுத்த ரீசார்ஜ் அடுத்த மாதம் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும். இந்த ரூ. 379 ஏர்டெல் திட்டத்தின் மூலம், பயனர்கள் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் காலிங்கயும், மாதம் முழுவதும் தினமும் 100 இலவச SMSகளையும் அனுபவிக்க முடியும். டேட்டாவைப் பொறுத்தவரை, கஸ்டமர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். கூடுதலாக, 5G பயனர்கள் அன்லிமிடெட் டேட்டாவிலிருந்தும் பயனடைவார்கள்.
இதையும் படிங்க :கஸ்டமர்களின் மனச குளிர வச்ச Airtel அதிக காலிங், அதிக வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மை
மற்ற நன்மைகள்
ஏர்டெல் யின் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசுகையில் இதில் அன்லிமிடெட் காலிங், டேட்டா தவிர 30GB க்ளவுட் ஸ்டோரேஜ், இலவச ஆப்பிள் ம்யுசிக், இலவச ஹெலோ ட்யூன் மற்றும் இலவச ஸ்பேம் அலர்ட் இதனுடன் இதில் 12 மாதங்கள் வரை Perplexity AI Pro சப்ஸ்க்ரிப்ஷன் நன்மையும் வழங்குகிறது. இதை தவிர இந்த திட்டமானது அதிக டேட்டா நன்மை அதும் 5G நன்மை பெற நினைக்கும் கஸ்டமர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும்
பாரதி ஏர்டெல் ரூ.799 திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினசரி 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 77 நாட்கள் ஆகும். இதன் விலை சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.10.38 ஆகும். இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 5G நன்மையும் இல்லை.