ரூ.10,000 கோடி நிலுவை தொகையை செலுத்தியது ஏர்டெல்

ரூ.10,000 கோடி  நிலுவை தொகையை செலுத்தியது  ஏர்டெல்
HIGHLIGHTS

நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு தொலைதொடர்புதுறை கடந்த 14-ந்தேதி உத்தரவிட்டு இருந்தது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசுக்கு உரிமம் கட்டணம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணம் உள்பட கிட்டத்தட்ட ரூ.35,586 கோடி நிலுவை தொகையை பாக்கி வைத்திருக்கிறது. நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு தொலைதொடர்புதுறை கடந்த 14-ந்தேதி உத்தரவிட்டு இருந்தது. 

மத்திய அரசுக்கு பாரதி ஏர்டெல், பாரதி ஹெக்ஸ்காம் மற்றும் டெலினார் சார்பாக மொத்தம் ரூ.10,000 கோடி செலுத்தப்பட்டது. பாரதி ஏர்டெல் (டெலினார் உள்பட) ரூ.9,500 கோடியையும், ஹெக்ஸ்காம் ரூ.500 கோடியை அளித்தது.

இதையடுத்து பிப்ரவரி 20-ந்தேதிக்குள் ரூ.10,000 கோடியையும் மீதுமுள்ள நிலுவை தொகையை மார்ச் 17-ந்தேதிக்குள் செலுத்துவதாக ஏர்டெல் பதில் அளித்து இருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு விதித்த காலக்கெடு மீது சுப்ரீம் கோர்ட்டு எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் தொலைதொடர்பு துறைக்கு ரூ.10,000 கோடி நிலுவை தொகையை ஏர்டெல் நிறுவனம் இன்று செலுத்தியது.

இதுதவிர நிறுவனத்தின் சுய மதிப்பீட்டு கணக்கை முடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த வோடபோன், இன்று ரூ. 2500 கோடியையும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் (பிப்ரவரி 21) ரூ. 1000 கோடியை செலுத்துவதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. எனினும், வோடபோன் நிறுவன கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது.

நிறுவனத்தின் சுய மதிப்பீட்டு கணக்கை விரைவாக முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றும், சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த விசாரணைக்கு முன்னர் அல்லது விசாரணை முடிந்தவுடன் மீதமுள்ள நிலுவை தொகையை செலுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் ஏர்டெல் தெரிவித்து உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo