மாப்பு வச்சிடாய ஆப்பு, ஜியோக்கே டஃப் கொடுத்து டாப்பில் இருக்கும் Airtel, டெப்பாசிட் இழந்து தவிக்கும் BSNL மற்றும் VI
சப்ஸ்க்ரிப்ஷன் சேர்க்கையில் ஏர்டெல் முதலிடத்திலும் , ஜியோ இரண்டாம் இடத்திலும் உள்ளன.
ஜியோ தொடர்ந்து மூன்றாவது மாதமாக பின்னுக்கு தள்ளி ஏர்டெல், ஜியோவை விஞ்சியுள்ளது
Airtel முன்னணி டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்திருப்பது
இந்திய டெலிகாம் துறையில் சமத்திய TRAI தகவலின் படி மார்ச் மாதத்தில் சப்ஸ்க்ரிப்ஷன் சேர்க்கையில் ஏர்டெல் முதலிடத்திலும் , ஜியோ இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனம் ஜியோ தொடர்ந்து மூன்றாவது மாதமாக பின்னுக்கு தள்ளி ஏர்டெல், ஜியோவை விஞ்சியுள்ளது. Airtel முன்னணி டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்திருப்பது , இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டுகிறது. போட்டி அதிகரித்து வருவதால், நிறுவனங்கள் தரமான சப்ஸ்க்ரிப்ஷன்கள் , 5ஜி சேவைகள் மற்றும் ஒருங்கிணைந்த திட்டங்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றன
SurveyBharti Airtel முன்னிலை
பார்தி ஏர்டெல், மார்ச் 2026- ல் சுமார் 12.5 லட்சம் வயர்லெஸ் சப்ஸ்க்ரிப்ஷன் சேர்த்துள்ளது. சப்ஸ்க்ரிப்ஷன் சேர்க்கையில் ஏற்பட்ட இத்தகைய மிகப்பெரிய வளர்ச்சி, அதனை டெலிகாம் நிறுவனங்களின் லிஸ்ட்டில் முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளது . தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஜியோவை விட ஏர்டெல் அதிக சப்ஸ்க்ரிப்ஷன்களைச் சேர்த்துள்ளது, இது அதன் வலுவான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
ஏர்டெல்லின் வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகள், அதன் பிரீமியம் பயனர்கள் மீதான கவனம் , மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க் தரம் மற்றும் அதிக மதிப்புள்ள வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வலுவான 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் ஆகியவை ஆகும்.
Jio சப்ச்க்ரிப்ஷனில் Airtel விட பின்னே சென்றது
ரிலையன்ஸ் ஜியோ மார்ச் மாதத்தில் சுமார் 10.5 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்த்தது. ஏர்டெல்லை விட குறைவான சந்தாதாரர்களைச் சேர்த்திருந்தாலும்தனது விரைவான விரிவாக்கத்தின் காரணமாகஜியோ 5ஜி ஃபிக்ஸட் வயர்லெஸ் அக்சஸ் (FWA) சந்தையில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது .
ஜியோ தற்போது மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட, அதிக டேட்டாவைப் பயன்படுத்தும் கஸ்டமர்கள் மற்றும் வீட்டு பிராட்பேண்ட் மீது அதிக கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது .
இதையும் படிங்க :ஒரே ஒரு ரீச்சர்ஜில் ஒரு ஆண்டு வரை நிம்மதி விரும்புவோர்களுக்காக Jio சூப்பர் அதிரடி திட்டம் அன்லிமிடெட் காலிங் மஜா
Vodafone idea மற்றும் BSNL சென்றது பின்னே
வோடஃபோன் ஐடியா தொடர்ந்து இரண்டாவது மாதமாக சப்ஸ்க்ரிப்ஷன்களைச் சேர்த்து , நிலைபெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது. மார்ச் மாதத்தில், அது 1.03 லட்சம் சப்ஸ்க்ரிப்ஷன் சேர்த்தது, இது பிப்ரவரியில் வெறும் 21,297 ஆக இருந்தது.
பிஎஸ்என்எல் நிறுவனம் சுமார் 2 லட்சம் சப்ஸ்க்ரிப்ஷன் பெற்றுள்ளது . இது, அதன் நெட்வொர்க் மேம்பாடுகள் மற்றும் விரிவாக்கத்தின் ஆரம்பகட்ட பலன்களை உணர்த்தக்கூடிய ஒரு அரிதான வளர்ச்சியாகும்.
இப்பொழுது ஜியோவை விட ஏர்டெல் மிஞ்சியதா
பார்தி ஏர்டெல், மார்ச் 2026-ல் அதிக எண்ணிக்கையிலான சப்ஸ்க்ரிப்ஷன் சேர்த்து, தொடர்ந்து மூன்றாவது மாதமாக சந்தையில் முன்னிலை வகிக்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile