Airtel
Bharti Airtel தனது ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்காக ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. நீங்கள் ஏர்டெல் 5ஜி சேவையைப் பயன்படுத்தி, ஒவ்வொரு மாதமும் கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், அந்நிறுவனத்தின் ரூ. 349 திட்டம் உங்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும் . இந்தத் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா என்ற பலனை ஏர்டெல் சேர்த்துள்ளது. இதன் மூலம், டேட்டா தீர்ந்துவிடுமோ என்ற கவலையின்றி கஸ்டமர்கள் இன்டர்நெட் பயன்படுத்தலாம்.
இந்த பார்தி ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும். இது அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.கூடுதலாக, பயனர்கள் ஒரு நாளைக்கு 1.5GB அதிவேக டேட்டாவைப் பெறலாம். இருப்பினும், 5G போன் வைத்திருக்கும் மற்றும் தங்கள் பகுதியில் ஏர்டெல் 5G நெட்வொர்க் கவரேஜ் உள்ள பயனர்கள், அன்லிமிடெட் 5G டேட்டா என்ற கூடுதல் பலனையும் பெறலாம் .
இதையும் படிங்க:Jio அம்பானி வேற லெவல்யா நீ,வெறும் ரூ,500 யில் வரும் சாதாரண 4G பீச்சர் போனில் TV பார்க்கலாம்
இந்தத் திட்டம் டேட்டா மற்றும் கால்களுக்கு மட்டும் இல்லாமல் இந்நிறுவனம் பல்வேறு என்டர்டைன்மென்ட் மற்றும் டிஜிட்டல் நன்மைகளையும் வழங்குகிறது.
இந்தத் திட்டம் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே அக்சஸ் நன்மை வழங்குகிறது, இதன் மூலம் கஸ்டமர்கள் சோனி LIV உட்பட 20க்கும் மேற்பட்ட OTT தளங்களிலிருந்து கன்டென்ட் பார்க்கலாம்.
ஏர்டெல் தனது கஸ்டமர்களுக்கு ஒரு வருடத்திற்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன், அத்துடன் 28 நாட்களுக்கு ஸ்பேம் அலர்ட், ஹலோ ட்யூன்ஸ் மற்றும் ஆப்பிள் மியூசிக் ஆகியவற்றையும் இலவசமாக வழங்குகிறது.