Motorola புதன் கிழமை இந்தியாவில் அதன் முதல் புக் ஸ்டைல் போல்டபில் போன் Motorola Razr Fold அறிமுகம் செய்தது. நிறுவனம் இந்த போல்டபில் போனை ஏற்கனவே 2026 யில் நடந்த Mobile World Congress (MWC 2026) யில் show கேஸ் செய்தது இதனுடன் இந்த போனில் Qualcomm Snapdragon 8 Gen 5 சிப்செட் ப்ரோசெசர் மற்றும் 6,000mAh பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அமங்கள் பார்க்கலாம் வாங்க.
மோட்டோரோலா ரேஸர் ஃபோல்டின் 12ஜிபி+256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ₹1,49,999 விலையிலும், 16ஜிபி+512ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ₹1,59,999 விலையிலும், மற்றும் 16ஜிபி+512ஜிபி ஃபிஃபா உலகக் கோப்பை 26வது பதிப்பு வேரியன்ட் ₹1,69,999 விலையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட், மோட்டோரோலாவின் இணையதளம் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட இந்தியா முழுவதுமுள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கும், மேலும் முன்பதிவுகள் தொடங்கிவிட்டன. ரேஸர் ஃபோல்ட் மே 20, 2026 அன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும்.
Motorola Razr Fold 6.6 இன்ச் கவர் டிஸ்ப்ளே உடன் வருகிறது இது 165Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 6000 நிட்ஸ் ப்ரைட்னாஸ் சப்போர்ட் செய்கிறது இதை தவிர இதில் 8.1 இன்ச் பெரிய போல்டபில் LTPO pOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, இதில் 2K ரேசளுசன் 120Hz ரெப்ரஸ் ரேட் Ultra Thin Glass ப்ரொடெக்ஷன் வழங்குகிறது.
இந்த ஃபோனின் டிசைன் மெலிதானது, மேலும் போல்டபில் நிலையிலும் ஒரு பிரீமியம் லுக் தருகிறது. இந்த ஃபோன், சமீபத்திய ப்லக்ஷிப் சிப்செட்டான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 ப்ரோசெசரில் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான மை யுஎக்ஸ் (My UX) இயங்குதளத்தில் இயங்குகிறது, மேலும் ஏழு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தல்களை வழங்குவதாக நிறுவனம் உறுதியளிக்கிறது.
இதையும் படிங்க:பட்டயகிளப்பும் ஆபர் Motorola யின் இந்த மாடலுக்கு சரமாரியான ஆபர் வெறும் ரூ,27,999க்கு வாங்கலாம்
மோட்டோரோலா ரேஸர் ஃபோல்ட், 50MP ப்ரைமரி கேமரா, 50MP டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50MP அல்ட்ராவைடு கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக, 32MP கவர் ஸ்கிரீன் கேமரா மற்றும் 20MP பின்புற கேமரா உள்ளன. இந்த போன் 8K வீடியோ ரெக்கார்டிங்கை சப்போர்ட் செய்கிறது .
பேட்டரியைப் பொறுத்தவரை, இதில் 6000mAh பேட்டரி உள்ளது, இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஃபோன் 5G, Wi-Fi 7, NFC, GPS மற்றும் USB Type-C போன்ற அம்சங்களையும் வழங்குகிறது. மேலும், இது IP49 ரேட்டிங் பெற்றிருப்பதால், அடிப்படை வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிச்டன்ட் திறனை வழங்குகிறது.