Airtel ஒரு பெரிய கும்பிடு,தினமும் 1.5GB டேட்டா மற்றும் அதிக வேலிடிட்டி உடன் வரும் பெஸ்ட் திட்டம்
Airtel இப்பொழுது தினமும் 1.5GB டேட்டா வழங்கும்
குறைந்த விலையில் கொண்டு வந்துள்ளது
இப்பொழுது இந்த திட்டத்தின் விலைகள் என்ன அதன் நன்மைள் பற்றி பார்க்கலாம் .
இந்தியாவில் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு பல ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டு வந்த நிலையில் இப்பொழுது தினமும் 1.5GB டேட்டா வழங்கும் திட்டத்தை கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் கொண்டு வந்துள்ளது நீங்கள் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டத்தை பெற விரும்பினால் இது உங்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும் இப்பொழுது இந்த திட்டத்தின் விலைகள் என்ன அதன் நன்மைள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBharti Airtel ரூ,579 யில் வரும் திட்டம்.
பாரதி ஏர்டெல் ரூ,579 யில் வருகிறது, இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் தினமும் 1.5GB டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் கால் மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் இதன் வேலிடிட்டி 56 நாட்களுக்கு இருக்கிறது மேலும் இதில் கஸ்டமர்களுக்கு Perplexity Pro AI நன்மை பெறலாம்.
இதையும் படிங்க:திடிர் என கண் விழித்து கொண்ட Vodafone Idea, Super Hero பிளான் Amazon Prime நன்மையுடன்
Airtel ரூ,619 திட்டம்.
ஏர்டெலின் இந்த திட்டத்தின் விலை ரூ,619 யில் வருகிறது இதன் நன்மை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிடெட் கால், தினமும் 100 SMS மற்றும் இதன் வேலிடிட்டி 60 நாட்களுக்கு இருக்கும் இதனுடன் நீங்கள் Perplexity Pro AI நன்மையும் பெறலாம்.
Bharti Airtel ரூ.799 திட்டம் –
ஏர்டெல்லின் ரூ.799 திட்டம் 1.5 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் , 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் 1 வருடத்திற்கு பெர்ப்ளக்ஸிட்டி புரோ AI ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 77 நாட்கள் ஆகும்.
Bharti Airtel ரூ.859 திட்டம் –
ஏர்டெல்லின் ரூ.859 திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் ஒரு வருடத்திற்கு பெர்ப்ளெக்ஸிட்டி புரோ AI மற்றும் ரிவார்ட்ஸ்மினி சந்தாவும் இணைக்கப்பட்டுள்ளன. ரூ.859 திட்டம் 84 நாட்கள் சேவை வேலிடிட்டி உடன் காலத்துடன் வருகிறது.
Bharti Airtel ரூ.929 திட்டம் –
ஏர்டெல்லின் ரூ.929 திட்டம் பயனர்களுக்கு 90 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இதனுடன், பயனர்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் பெர்ப்ளெக்ஸிட்டி புரோ AI ஆகியவற்றைப் பெறலாம் .
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile