Airtel யின் பக்கவான பிளான் ரூ,220க்கும் கம்மி விலையில் அன்லிமிடெட் காலிங், டேட்டா 28 நாள் வேலிடிட்டி

இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பாரதி Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,220க்கும் குறைந்த விலையில் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த ரூ,220 வேலிடிட்டி கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் வரை இருக்கிறது இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.

Airtel ரூ,219 திட்டத்தின் விலை .

ஏர்டெல்லின் ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ,220-க்கும் குறைவாகும். இந்தத் திட்டம் குறிப்பாக குறைந்த பட்ஜெட் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது இலவச காலிங் , டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான 12 மாத சந்தாவையும் அந்நிறுவனம் வழங்குகிறது.

Airtel rs 219 plan

இந்த ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம் ரூ,219-க்குக் கிடைக்கிறது. கஸ்டமர்கள் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இலவச தேசிய ரோமிங் ஆகியவற்றைப் வழங்குகிறது. இந்த குறைந்த விலை ரீசார்ஜ் திட்டத்துடன் 300 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 3ஜிபி அதிவேக டேட்டா பலன்களும் வழங்கப்படுகின்றன. கூடுதல் டேட்டாவிற்கு, பயனர்கள் டேட்டா-மட்டும் திட்டத்தில் டாப்-அப் செய்துகொள்ளலாம் மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டியோ 28 நாள் இருக்கிறது.

இதையும் படிங்க Jio அறிமுகம் செய்த JioShield அம்சம் ஒரு ஆண்டு வரை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பாதுகாப்பு

டிராயின் உத்தரவைத் தொடர்ந்து, ஏர்டெல் உட்பட அனைத்து டெலிகாம் நிறுவனங்களும், டேட்டா இல்லாத குறைந்த விலை வாய்ஸ் மற்றும் SMS மட்டும் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தத் திட்டங்கள் குறிப்பாகக் குறைந்த மாத வருமானம் உள்ள பயனர்களை இலக்காகக் கொண்டிருக்கும். டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நிறுவனங்கள் ஏற்கனவே குறைந்த விலை 84 மற்றும் 365 நாள் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :