Airtel சூப்பர் திட்டம் 100 Mbps அதிவேக ஸ்பீட் உடன் TV + OTT Amazon Prime + Netflix மற்றும் பல நன்மை

HIGHLIGHTS

Bharti Airtel, அதன் கஸ்டமர்களுக்கு 100 Mbps திட்டத்தை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இதன் மூலம் அதிகபட்ச அப்லோட் மற்றும் டவுன்லோட் ஸ்பீட் வழங்குகிறது

மொத்தம் நான்கு 100 Mbps திட்டங்கள் உள்ளன

இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel, அதன் கஸ்டமர்களுக்கு 100 Mbps திட்டத்தை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதன் மூலம் அதிகபட்ச அப்லோட் மற்றும் டவுன்லோட் ஸ்பீட் வழங்குகிறது இதில் ரூ,1199 வரும் இந்த திட்டத்தில் அதிகபட்ச OTT நன்மை என பல சலுகை வழங்குகிறது இதை தவிர ஆக மொத்தம் நான்கு 100 Mbps திட்டங்கள் உள்ளன, அவை ரூ. 799 முதல் தொடங்குகின்றன. அது தவிர, நீங்கள் ரூ. 899 மற்றும் ரூ. 999 திட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யலாம். ஏர்டெல்லின் 100 Mbps திட்டங்களில் ரூ. 1199 திட்டம்தான் மிகவும் விலை உயர்ந்தது என்பது தெளிவாகிறது. ஏனெனில் இந்தத் திட்டம், அதிவேக பிராட்பேண்ட் அணுகலுடன், நேரலை டிவி சேனல்கள் மற்றும் Apple TV+, ZEE5, Netflix, Amazon Prime போன்ற முக்கிய OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகள் உள்ளிட்ட பல கூடுதல் என்டர்டைன்மென்ட் நன்மைகளையும் ஒருங்கிணைக்கிறது. இந்தத் திட்டத்தைப் பற்றி இங்கு இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

Airtel ரூ,799 திட்டத்தின் நன்மை.

ஏர்டெல் பிராட்பேண்டின் 100mbps திட்டம் ₹799-யில் தொடங்குகிறது. இந்த ₹799-க்கு, நீங்கள் 100mbps ஸ்பீடுடன் அன்லிமிடெட் டேட்டா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சப் வழியாக 22 OTT தளங்களுக்கான அக்சஸ் மற்றும் கூகுள் ஒன் சப்ஸ்க்ரிப்ஷன் ஆகியவற்றைப் பெறலாம் .

Airtel 100mbps plan

Airtel ரூ.899 திட்டத்தில் வேறு என்னென்ன கிடைக்கும்?

ரூ. 899 திட்டமும் 100mbps வேகத்தை வழங்குகிறது, ஆனால் அதன் நன்மைகள் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கூகுள் ஒன், ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 உள்ளிட்ட 22 OTT தளங்கள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Airtel ரூ.999 திட்டம் ஏன் சிறப்பு வாய்ந்தது?

Airtel 100mbps plan (1)

ஏர்டெல் ரூ,999 திட்டத்திலும் 100mbps ஸ்பீட் இருந்தாலும், அது உங்கள் OTT விருப்பங்களை கணிசமாக விரிவுபடுத்துகிறது. இது Google One, Jio Hotstar, மற்றும் Zee5 உள்ளிட்ட 22 OTT தளங்களுக்கான அக்சஸ் , மேலும் Netflix, Amazon Prime, மற்றும் Apple TV ஆகியவற்றிற்கான சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது.

இதையும் படிங்க சுதந்திர தினத்தை முன்னிட்டு Jio புதிய ரூ,10000 திட்டம் அறிமுகம் 100 Mbps ஸ்பீட் OTT உட்பட 15 மாதங்கள் வேலிடிட்டி

Airtel ரூ 1199 பிராட்பேண்ட் திட்டம்

Airtel 100mbps plan (2)

பார்தி ஏர்டெல்லின் ரூ.1199 பிராட்பேண்ட் திட்டம் 100 Mbps ச்பீடுடன் வருகிறது. இந்தத் திட்டத்துடன் வழங்கப்படும் டேட்டா, ஃபைபர் கனேக்ஷனுடன் 3.3TB ஆகவும், ஏர்ஃபைபர் கனேக்ஷனுடன் 1TB ஆகவும் உள்ளது. இந்தத் திட்டத்தின் டவுன்லோட் மற்றும் அப்லோட் ஸ்பீட் ஒரே மாதிரியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 350-க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்களுக்கான அக்சஸ் ஏர்டெல் வழங்குகிறது. அதனுடன், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சப்ச்க்ரிப்ஷனுடன் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், கூகுள் ஒன், ஆப்பிள் டிவி+, ZEE5, ஜியோஹாட்ஸ்டார், மேலும் 22-க்கும் மேற்பட்ட OTT தளங்கள், 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் மற்றும் பல OTT நன்மைகளும் உள்ளன.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :