Jio, Airtel மற்றும் Vi,5G அறிமுகத்தை தொடர்ந்து கூறுவது என்ன?

HIGHLIGHTS

இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) நாட்டில் 5G அறிமுகத்துடன் தொடங்கியது.

IMC அக்டோபர் 1 முதல் அக்டோபர் 4, 2022 வரை இயங்கும்

இந்திய மொபைல் காங்கிரஸில் 5G பற்றி ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா என்ன கூறியுள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்?

Jio, Airtel மற்றும் Vi,5G  அறிமுகத்தை தொடர்ந்து கூறுவது என்ன?

இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) நாட்டில் 5G அறிமுகத்துடன் தொடங்கியது. (IMC 2022) புது டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது IMC இன் ஆறாவது எடிஷன் ஆகும். இந்தியா மொபைல் காங்கிரஸ் 2017 இல் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, IMC 2022 இன் தொடக்க விழாவின் போது, ​​இந்தியா மொபைல் காங்கிரஸ் இன்று மிகவும் பரந்ததாகவும் ஈடுபாடுடையதாகவும் மாறிவிட்டது, அதை இப்போது ஆசியா மொபைல் காங்கிரஸ் என்று அழைக்கலாம். IMC அக்டோபர் 1 முதல் அக்டோபர் 4, 2022 வரை இயங்கும். முகேஷ் அம்பானி குறைவான விலையில் 5G கிடைக்கும் என்றும், அதன் கவரேஜ் கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருக்கும் என்றும் கூறியுள்ளார். இன்று இந்திய மொபைல் காங்கிரஸில் 5G பற்றி ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா என்ன கூறியுள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்?

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 Airtel யின் இன்று முதல் 5ஜி சர்வீஸ்

Airtel தனது 5ஜி சர்வீஸ் இன்று அதாவது அக்டோபர் 1 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. பார்தி ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் பார்தி மிட்டல் இந்தியா மொபைல் காங்கிரஸில், நாட்டில் 5ஜி சர்வீஸ் அறிமுகப்படுத்திய முதல் கம்பெனியாக ஏர்டெல் மாறியுள்ளது என்று கூறினார். இன்று முதல், ஏர்டெல்லின் 5G சர்வீஸ் நாட்டின் 8 நகரங்களில் – டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூர் மற்றும் பிற நகரங்களில் கிடைக்கிறது. கொல்கத்தா மற்றும் டெல்லியில் உள்ள சில யூசர்கள் ஏர்டெல்லின் 5G நெட்வொர்க் சமூக ஊடகங்களில் கிடைப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

 Jio யின் திட்டமிடல் என்றால் என்ன?

ரிலையன்ஸ் Jio 5G அறிமுகம் குறித்து எந்த ஒரு நிலையான தேதியையும் வழங்கவில்லை, ஆனால் தீபாவளியன்று 5G பரிசு வழங்கப்படும் என்றும், டிசம்பர் 2023க்குள், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் Jio 5G சர்வீஸ் வழங்கப்படும் என்றும் உறுதியாகக் கூறியுள்ளது. இந்தியா மொபைல் காங்கிரஸில் குறைவான விலையில் 5G சர்வீஸ்களை அம்பானி உறுதியளித்தார். தில்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு மெட்ரோ நகரங்களுக்கு தீபாவளிக்குள் 5G சர்வீஸ் அறிமுகப்படுத்தும் என்று அம்பானி ஆகஸ்ட் மாதம் நடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் அறிவித்தார்.

 Vi யின் என்ன நிலை?

நாட்டின் மூன்றாவது பெரிய டெலிகாம் கம்பெனி வோடபோன் ஐடியாவும் 5ஜியை விரைவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது ஆனால் எந்த தேதியையும் தெரிவிக்கவில்லை. இது தவிர, எந்தெந்த நகரங்களில் இந்த கம்பெனியின் சர்வீஸ் முதலில் தொடங்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, இந்தியா மொபைல் காங்கிரஸ் 2022 இன் தொடக்க விழாவில், “நாங்கள் 5ஜியை மிக விரைவில் வெளியிடுவோம். கிராமப்புற இந்தியாவில் எங்களின் வலுவான இருப்பை, எங்கள் கம்பெனி வாடிக்கையாளர்கள், எங்கள் தொழில்நுட்பக் கூட்டாளர்கள் மற்றும் வோடபோன் குழுமத்தின் உலகளாவிய அனுபவத்தைப் பயன்படுத்தி வரும் காலங்களில் எங்கள் 5G நெட்வொர்க் மற்றும் சர்வீஸ்களை வெளியிடுவோம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo