Suzuki யின் அசத்தலான ஸ்கூட்டர் ரூ.86,500 விலையில் அறிமுகம்

HIGHLIGHTS

சுஸூகி நிறுவனத்தின் அவெனிஸ் ஸ்கூட்டரின் புதிய ட்ரிம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ந்த பைக் ஸ்போர்ட்டி இன்ஜினுடன் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 125cc இன்ஜின் FI தொழில்நுட்பத்துடன் தரப்பட்டுள்ளது

சுஸூகி நிறுவனத்தின் அவெனிஸ் ஸ்கூட்டரின் புதிய ட்ரிம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த பைக் ஸ்போர்ட்டி இன்ஜினுடன் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 125cc இன்ஜின் FI தொழில்நுட்பத்துடன் தரப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6750 rpm-ல் 8.7 PS அதிகப்பட்ச சக்தியையும், 5500 rpm-ல் 10Nm டார்க்கையும் உருவாக்கக்கூடியது. இந்த ஸ்கூட்டர் 106 கிலோ எடையை கொண்டுள்ளதால் குறைந்த எடை கொண்ட ஸ்கூட்டர்கலில் ஒன்றாக இருக்கிறது.

மேலும் இந்த ஸ்கூட்டரில் எல்.இ.டி லைட்டிங் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்பிற்கு தரப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் வெளிப்புற ஹிஞ்ச் வகை எரிபொருள் கேப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சீட்டிற்கு கீழே உள்ள இடம் மேலும் பெரிதாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.86,500-ஆக அறிவிக்கபட்டுள்ளது. இது முந்தைய ட்ரிம்மை விட ரூ.200 குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :