SBI பயனர்களுக்கு எச்சரிக்கை இதை உடனே செய்யுங்க இல்லின்னா பிரச்சனை உங்களுக்குதான்.
SBI வங்கியின் புதிய அறிவிப்பு
ஆதார் உடன் பான் எண்ணை இணைக்கவில்லை என்றால் உடனடியாக அதை செய்யுமாறு தன் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
செப்டம்பர் 30 வரை கெடு
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI ) இதுவரை ஆதார் உடன் பான் எண்ணை இணைக்கவில்லை என்றால் உடனடியாக அதை செய்யுமாறு தன் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Surveyஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ட்விட்டர் ஹேண்டிலின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியான ட்வீட் ஆனது, "வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தையும் தவிர்க்கவும் மற்றும் தடையற்ற வங்கி சேவையை தொடர்ந்து அனுபவிக்கவும் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்."
ஏற்கனவே பான் மற்றும் ஆதாரை இணைத்துள்ள பயனர்கள் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்த வேண்டாம். இதுபற்றிய அறிவிப்பை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள ட்விட்டரில் இந்த வெளியிட்டது.
பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால், "பான் inoperative/inactive ஆக இருக்கும் மற்றும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை நிகழ்த்த முடியாது" என்று எஸ்பிஐ தன் பயனர்களை எச்சரித்துள்ளது.
We advise our customers to link their PAN with Aadhaar to avoid any inconvenience and continue enjoying a seamless banking service.#ImportantNotice #AadhaarLinking #Pancard #AadhaarCard pic.twitter.com/IEjjskvu1W
— State Bank of India (@TheOfficialSBI) July 30, 2021
பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி ஆக செப்டம்பர் 30, 2021 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையானதைச் செய்ய நிறைய நேரம் இருக்கிறது.
பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை விரைவாக இணைக்க, SBI தன் பயனர்களை புதிய ஐடி போர்ட்டலுக்கு – https://www.incometax.gov.in/iec/foportal/ செல்லுமாறும் கேட்டுக்கொள்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
