சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 10.5 இன்ச் டி.எப்.டி. ஸ்கிரீன், யுனிசாக் டி618 பிராசஸர், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
– 10.5 இன்ச் 2000×1200 பிக்சல் டி.எப்.டி. டிஸ்ப்ளே
– யுனிசாக் டி618 பிராசஸர்
– மாலி ஜி52 எம்.பி.2 ஜி.பி.யு.
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11
– 8 எம்.பி. பிரைமரி கேமரா
– 5 எம்.பி. செல்பி கேமரா
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
– 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5
– 7,040 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் அடாப்டிவ் பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் கிரே, சில்வர் மற்றும் பின்க் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17,999 என துவங்குகிறது. இதன் விற்பனை ஜனவரி 17 ஆம் தேதி துவங்குகிறது.