சாம்சங் நிறுவனத்தின் 55 கொண்ட கேமிங் மோனிட்டர் இந்தியாவில் அறிமுகம்.

HIGHLIGHTS

சாம்சங் நிறுவனத்தின் ஒடிசி ஆர்க் கேமிங் மானிட்டர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த மானிட்டர் 2022 ஐஎப்ஏ நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது

இதில் உள்ள கேம் பார் கொண்டு டிஸ்ப்ளே செட்டிங்களை மாற்றிக் கொள்ளலாம்.

சாம்சங் நிறுவனத்தின் 55  கொண்ட கேமிங் மோனிட்டர் இந்தியாவில்  அறிமுகம்.

சாம்சங் நிறுவனத்தின் ஒடிசி ஆர்க் கேமிங் மானிட்டர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. முன்னதாக இந்த மானிட்டர் 2022 ஐஎப்ஏ நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதில் 55 இன்ச் வளைந்த ஸ்கிரீன், QVGA தொழில்நுட்பம் மற்றும் மினி எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் 14-பிட் VA QLED டிஸ்ப்ளே, HDR10+, AMD பிரீசின்க் பிரீமியம் ப்ரோ, 165Hz ரிப்ரெஷ் ரேட், 1 மில்லி செகண்ட் கிரே-டு-கிரே ரெஸ்பான்ஸ் டைம் மற்றும் 4K ரெசல்யூஷன் உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதில் உள்ள கேம் பார் கொண்டு டிஸ்ப்ளே செட்டிங்களை மாற்றிக் கொள்ளலாம். இத்துடன் ஆக்டிவேட் செய்யப்பட்ட ஒடிசி ஆர்க் மூலம் நான்கு வீடியோ இன்புட்களை இயக்க முடியும். இதில் உள்ள சாம்சங் கேமிங் ஹப் மூலம் அமேசான் லூனா, மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் கிளவுட் மற்றும் என்விடியா ஜீஃபோர்ஸ் நௌ உள்ளிட்டவைகளை இயக்க முடியும். இத்துடன் டால்பி அட்மோஸ், 60 வாட் 2.2.2 சேனல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மானிட்டர் டைசன் ஒஎஸ் மூலம் இயங்குகிறது. இதன் மூலம் ஆப்பிள் டிவி பிளஸ், டிஸ்னி பிளஸ், நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்டவைகளை பயன்படுத்த முடியும். இத்துடன் அலெக்சா வசதியும் உள்ளது. இதில் சாம்சங் ஹெல்த், ஸ்மார்ட்திங்ஸ், வைபை 5, மிராகேஸ்ட், ப்ளூடூத் 5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப் சி கனெக்டர், ஈத்தர்நெட் போர்ட், நான்கு ஹெச்டிஎம்ஐ 2.1 கனெக்‌ஷன்கள் உள்ளன.

புதிய சாம்சங் ஒடிசி ஆர்க் மானிட்டருடன் உயரத்தை அட்ஜஸ்ட் செய்வதோடு பல வழிகளில் வசதியாக வைத்துக் கொள்ள உதவும் ஸ்டாண்ட் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் சாம்சங் ஒடிசி ஆர்க் 55 இன்ச் பிளாக்‌ஷிப் கேமிங் மானிட்டர் விலை ரூ. 2 லட்சத்து 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile