சாய் பல்லவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கார்கி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ளது. கார்கி படத்தை சூர்யா உட்பட உள்பட பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் பாராட்டியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்த நடிகை சாய் பல்லவி, தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்கி என்ற திரைப்படம், இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ளது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
இதனை நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தாமஸ் ஜார்ஜ், கௌதம் ராமச்சந்திரன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளார்கள். கோவிந்தா படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
கார்கி படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் நடிகை சாய் பல்லவி டப்பிங் பேசியுள்ளார்.ஜூலை 15ஆம் தேதி திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் கார்கி படத்தை, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது