உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து ஆறாவது நாளாக தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் கடுமையான சண்டையிட்டு வருகிறது.
இந்த போரின் காரணமாக உக்ரைன் நாட்டு மக்கள் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல், இரு தரப்பிற்கும் இடையே நடந்துவரும் மோதலில் ரஷ்ய வீரர்கள் 4,300 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரஷிய படைகள் ஆக்கிரமிக்க முடியாத அண்டை நாடுகளின் எல்லைகளில் ரீசீவர் முனையங்களை நிறுவி, செயற்கைக்கோள் மூலமாக அலைகற்றை உள்வாங்கி, அவற்றை உக்ரைனுக்கு வழங்குவதே தனது திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் பெரும் பின்னடைவை சந்தித்த உக்ரைன் நாட்டிற்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உதவி செய்ய முன் வந்தார். இதன்படி தங்கள் நிறுவனத்தின் செயற்கைக்கோள் வழி வழங்கப்படும் ’ஸ்டார் லிங்க்’ இணைய சேவையை உக்ரைன் நாட்டிற்கு எலான் மஸ்க் வழங்கியுள்ளார்.
ரஷிய படைகள் மேலும் தாக்குதலால் நடத்தினாலும் ஸ்டார்லிங் இணைய சேவையை நிறுத்த முடியாது என்றும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை கொண்டு இந்த இணைய சேவை வழங்கப்படும் என கூறியுள்ளார்.