படஜெட் விலையில் நோட்ச் டிஸ்பிளே உடன் Realme C1 அறிமுகம்…!

HIGHLIGHTS

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் புதிய C 1 ஸ்மார்ட்போனாயும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

படஜெட்  விலையில் நோட்ச் டிஸ்பிளே உடன்  Realme  C1 அறிமுகம்…!

பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ரியல்மி C 1 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ  நாட்ச் டிஸ்ப்ளே, 87.8% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கலர் OS . 5.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் ரியல்மி C 1 ஸ்மார்ட்போனில் நீங்கள் போட்டோக்கள் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் பிங்காரப்ரின்ட் சென்சார் வழங்கப்படாத நிலையில் ரியல்மி C 1 மாடலில் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி C 1 சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 1520×720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– கலர் ஓ.எஸ். 5.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
– ஃபேஸ் அன்லாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4230 Mah  பேட்டரி

விலை மற்றும் விற்பனை 

ரியல்மி சி1 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரியல்மி சி1 விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிளிப்கார்ட் வெப்சைட்டில் மட்டும் எக்ஸ்க்ளுசிவக விற்பனை செய்யப்பட இருக்கும் ரியல்மி C 1 அக்டோபர் 11-ம் தேதி முதல் கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile