ரன்பீர் கபூர் – ஆலியா பட் நடிக்கும் Brahmastra ட்ரைலர் ரிலீசாகியது.

HIGHLIGHTS

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாஸ்திரா படத்தின் டிரெய்லர் - முதல் பாகம்: ஜூன் 15 புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டது

படத்தில் ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா மற்றும் மௌனி ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.

அயன் முகர்ஜி இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லரைப் பற்றி பார்ப்போம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாஸ்திரா படத்தின் டிரெய்லர் – முதல் பாகம்: ஜூன் 15 புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டது. படத்தில் ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா மற்றும் மௌனி ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் அயன் முகர்ஜி இந்த  திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லரைப் பற்றி பார்ப்போம்.

ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரீத்தம் இசையமைத்துள்ளார். ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் மிகப் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

டிரெய்லர் பற்றி தகவலை தெரிந்து கொள்ளலாம்.

படத்தின் கதைக்களத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் அமிதாப் பச்சனின் குரலுடன் டிரெய்லர் தொடங்குகிறது, அங்கு 'அஸ்ட்ராவர்ஸ்' அதாவது நெருப்பு, நீர், காற்று போன்ற இயற்கையின் கூறுகள் இருக்கும் ஒரு பிரபஞ்சம் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. 

தீமை – நன்மை ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் பாகம். இதற்கு ஷிவா என பெயரிடப்பட்டு உள்ளது. இந்திய திரையுலகத்தில் இது மிகவும் முக்கியமான படமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் ரசிகர்களுக்கு நிச்சயம் சிறந்த அனுபவத்தை கொடுக்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தின் நாயகன் ரன்பீர் கபூர் நெருப்பின் சக்தி கொண்ட இளைஞன் ரோலில் நடித்திருக்கிறார். இந்தியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். தற்போது வெளியாகவிருக்கும் பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் பாகத்திற்கான டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :