பிப்ரவரி 2023 யில் OTT யில் வெளியாகும் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ.

HIGHLIGHTS

பிப்ரவரி 2023 யில் வெளியாகவுள்ள அசத்தலான OTT திரைப்படங்கள் இந்த லிஸ்டில் உள்ளன ச

பொங்கல் ரிலீசாக வெளிவந்த விஜயின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பியதோடு, ரசிகர்களையும் மகிழ்வித்தன

பிப்ரவரி 2023 யில் வெளியாகவுள்ள அசத்தலான OTT திரைப்படங்கள் இந்த லிஸ்டில் உள்ளன சமீபத்தில்  திரையரங்குகளில் வெற்றிகரமாக  ஓடிக்கொண்டிருக்கிறது  பொங்கல் ரிலீசாக வெளிவந்த விஜயின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பியதோடு, ரசிகர்களையும் மகிழ்வித்தன அந்த வகையில் இங்கு OTT யில் லிஸ்ட் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

பிளாக் பேந்தர்

பிளாக் பேந்தர்: வகண்டா ஃபாரெவர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியானது. மன்னன் டி'சல்லாவின் மரணத்தை அடுத்து, உலக வல்லரசுகளின் தலையீட்டிலிருந்து தங்கள் இருப்பிடத்தைக் காக்க வக்கண்டான்களின் போராட்டம்தான் படத்தின் கதையாக உள்ளது. 

செம்பி

கோவை சரளா நடிப்பில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள செம்பி படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. 10 வயதான செம்பி மற்றும் அவரது பாட்டி வீரத்தாயியின் வாழ்க்கையை காட்டும் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.

துணிவு

அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஓடிடி தளமான நெட்பிளிக்சில் இப்படம் வரும் 8-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாரிசு

விஜயின் சூப்பர் ஹிட் படமான வாரிசு ஓடிடி தளங்களில் இம்மாதம் 22 ஆம்  தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களும் பிப்ரவரி 10 ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகும் என கூறப்பட்டது

ஃபர்ஸி

ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள ஃபர்ஸி வெப் சீரிஸ் பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :