vivo-v80-
Vivo இந்தியாவில் அதன் புதிய Vivo V80 போனின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது, மேலும் இந்த போன் Vivo V70 போனின் அப்க்ரேட் வெர்ஷனாகும் மேலும் இந்த போனில் 7200mAh மிக சிறந்த பேட்டரியுடன் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும், மேலும் இந்த போனின் அறிமுக தேதி மற்றும் பல தகவல் பார்க்கலாம் வாங்க.
விவோ அதன் Vivo India அதிகாரபூர்வ X பக்கத்தில் அறிமுக தேதியை அறிவித்துள்ளது. இந்த போனின் அறிமுகமானது அக்டோபர் 6 பகல் 12 மணிக்கு நடைபெறும், மேலும் இந்த போனை Sunrise Anthem, Horizon Blue மற்றும் Stellar Black ஆகிய கலரில் வாங்கலாம். அதன் பிறகு இதன் விற்பனை விவோவின் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் Amazon, Flipkart போன்ற ஆன்லைனில் வாங்கலாம்.
Meet the all-new vivo 80 in Sunrise Anthem. Where color meets
— vivo India (@Vivo_India) September 22, 2026
character. Launching on 6th October 2026. #vivoV80 #MyCinematicMoments #ZEISSPortraitSoPro pic.twitter.com/cPFVqCHChb
இந்த விவோ ஃபோனில் 6.59-இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே 144Hz உயர் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும். மேலும், இது 5000 நிட்ஸ் வரையிலான உச்சபட்ச பிரகாசத்தைக் கொண்டிருக்கும். இந்த டிஸ்ப்ளே வெறும் 1.25 mm திக்னஸ் கொண்ட மிகவும் மெல்லிய பெசல்களைக் கொண்டிருக்கும்.
கேமராக்களைப் பற்றி பேசுகையில், இந்த விவோ போன் Zeiss பிராண்டட் கேமரா யூனிட்டுடன் வரும். இதில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 50MP நைட் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 50MP முன்பக்க கேமராவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனின் கேமரா 100x டிஜிட்டல் மற்றும் 3x ஆப்டிகல் ஜூமை சப்போர்ட் செய்யும் .
இதையும் படிங்க Motorola புதிய Signature போனை 200MP கேமராவுடன் டீஸ் செய்யப்பட்டுள்ளது
விவோ V80, கூகுள் ஜெமினியை அடிப்படையாகக் கொண்ட AI அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்படும். இதில் ஆண்ட்ராய்டு 17-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆரிஜின்ஓஎஸ் 7 (OriginOS 7) இருக்கும். இந்த போன், சக்திவாய்ந்த 7200mAh பேட்டரி மற்றும் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வரலாம். நிறுவனம் மற்ற அம்சங்களை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. சமீபத்தில், இந்த போன் கீக்பெஞ்சில் (Geekbench) பட்டியலிடப்பட்டது, அங்கு போனின் சிப்செட் விவரங்கள் வெளியிடப்பட்டன. இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்படலாம். மேலும், இந்த போன் IP68 மற்றும் IP69 வாட்டர் ப்ரூஃப் ரேட்டிங்குடன் வரலாம்.