Motorola புதிய Signature போனை 200MP கேமராவுடன் டீஸ் செய்யப்பட்டுள்ளது

Motorola சிக்னேச்சரின் அடுத்த தலைமுறை மாடலை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த போன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம். அந்நிறுவனம் இதை மோட்டோரோலா சிக்னேச்சர் 27 என்ற பெயரில் அறிமுகப்படுத்தக்கூடும். அந்நிறுவனம் வெளியிட்ட ஒரு போஸ்டரின்படி, இந்த போன் இரண்டு வண்ண விருப்பங்களில் வழங்கப்படும். குவால்காம் ஸ்னாப்டிராகன் மாநாட்டில் இந்த போன் காட்சிப்படுத்தப்பட்டது, இது இந்த போன் குவால்காமின் வரவிருக்கும் முதன்மை சிப்செட்டைப் பயன்படுத்தும் என்பதைக் குறிக்கிறது.

Motorola Signature 27 அறிமுக தேதி

Motorola, X சோசியல் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு, இந்த போன் குறித்த குறிப்பை வெளியிட்டுள்ளது. ஃபாஸ்டரின் கூற்றுப்படி, இந்த போன் 2027 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த போன், இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா சிக்னேச்சரின் அப்டேட் செய்யப்பட மாடலாக இருக்கும். இந்த மோட்டோரோலா போன் இந்தியாவில் ரூ. 59,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த போஸ்டரின்படி, மோட்டோரோலா சிக்னேச்சர் 27-ன் வெளியீட்டுத் தேதி செப்டம்பர் 22 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலாவின் இந்த வரவிருக்கும் ப்லாக்ஷிப் போன், பேனடோன் மார்டினி ஆலிவ் மற்றும் பேனடோன் கார்பன் ஆகிய இரண்டு kalar விருப்பங்களில் வழங்கப்படும்.

மோட்டோரோலா சிக்னேச்சர் 27-ன் எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கள்

இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் ப்ரோசெசரால் இயக்கப்படும் என்றும் டீசர்கள் வெளிப்படுத்தியுள்ளன. சிக்னேச்சர் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு வெவ்வேறு பொருட்களைப் பயன்படுத்துவதில் மோட்டோரோலாவின் கவனத்தை இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது. இது சிக்னேச்சர் 27-க்கான பேன்டோன்-அங்கீகரிக்கப்பட்ட இரண்டு புதிய கலர்களான பேன்டோன் கோல் ஸ்மோக் மற்றும் பேன்டோன் கேப்லெட் ஆலிவ் ஆகியவற்றையும் காட்சிப்படுத்துகிறது. டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் திறனுடன் கூடிய 200 மெகாபிக்சல் கேமராவையும் இந்த டீசர் வீடியோ வெளிப்படுத்துகிறது.

இதையும் படிங்க ஐபோனுக்கு டஃப் கொடுக்கும் விலையில் Realme 16 Pro 5G Harry Potter எடிஷன் அறிமுகம் அப்படி என்ன அம்சம் இருக்கு

மோட்டோரோலா தனது சிக்னேச்சர் போனை கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் பேன்டோன் மார்டினி ஆலிவ் மற்றும் பேன்டோன் கார்பன் ஆகிய இரண்டு கலர்களில் அறிமுகப்படுத்தியது. இந்த போனில் 165Hz ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.8-இன்ச், 1.5K LTPO AMOLED பேனல் இடம்பெற்றிருந்தது. இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்டில் இயங்குகிறது மற்றும் 16GB வரை ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜை வழங்குகிறது. இதன் அடிப்படை ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் தற்போதைய விலை ரூ. 59,999 ஆகும்.

சிக்னேச்சர் 27-ஐப் போலல்லாமல், இந்த சிக்னேச்சரில் 50-மெகாபிக்சல் டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இந்த போனில் 50-மெகாபிக்சல் முன்பக்க செல்ஃபி கேமராவும் உள்ளது. மோட்டோரோலா சிக்னேச்சர் போனால் 30 fps வேகத்தில் 8K டால்பி விஷன் வீடியோக்களைப் பதிவு செய்ய முடியும். இதன் மெல்லிய வடிவமைப்பைக் கருத்தில் கொண்டு, இதில் 5,200mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 90W வயர்டு சார்ஜிங் மற்றும் 10W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :