ஐபோனுக்கு டஃப் கொடுக்கும் விலையில் Realme 16 Pro 5G Harry Potter எடிஷன் அறிமுகம் அப்படி என்ன அம்சம் இருக்கு

HIGHLIGHTS

Realme இன்று இந்தியாவில் அதன் புதிய Realme 16 Pro 5G Harry Potter எடிஷன் அறிமுகம்

இது Apple iPhone 16 போனுக்கு டஃப் கொடுக்கும்

Realme 16 Pro 5G யின் அப்க்ரேட் வெர்ஷன் ஆகும்

Realme இன்று இந்தியாவில் அதன் புதிய Realme 16 Pro 5G Harry Potter எடிஷன் அறிமுகம் செய்துள்ளது, இது Realme 16 Pro 5G யின் அப்க்ரேட் வெர்ஷன் ஆகும் மேலும் இது Apple iPhone 16 போனுக்கு டஃப் கொடுக்கும் விலையில் இருக்கிறது மேலும் இந்த போனின் பின்புறத்தில் 200MP + 8MP துயல் கேமரா மற்றும் செல்பிக்கு 50MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Realme 16 Pro 5G Harry Potter Edition விலை தகவல்

Realme 16 Pro 5G Harry Potter Edition 12GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட விலை ரூ,62,999 ஆகும், மேலும் தற்பொழுது சிங்கிள் வேரியன்ட் வந்துள்ளது, இது நாளை அதாவது செப்டம்பர் 22 அன்று பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் HDFC,ICICI மற்றும் SBIகார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,6,300 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதாவது நீங்கள் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் 56,699ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை பெறலாம்.

Realme 16 Pro 5G Harry Potter

Realme 16 Pro 5G Harry Potter Edition சிறப்பம்சம்.

Realme 16 Pro 5G ஹேர்ரிபோட்டார் எடிஷன் கொண்ட இந்த போன அழகிய பிரவுன் லெதர் பினிஷ் கொண்டுள்ளது மற்றும் இது argyle டேக்ச்ஜர் உடன் இதன் பின் பேணல் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் லைட் சென்சிங் Quadra கலர் மாறும் டெக்னாலஜி கொண்டுள்ளது புற ஊதாக் (UV) ஒளியின் கீழ், பின்புறப் பலகையில் உள்ள ஹாக்வார்ட்ஸின் நான்கு-இல்லச் சின்னம் (Hogwarts Four-House Crest), நான்கு நிறங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் வகையில் காட்சியளிக்கிறது.

Realme 16 Pro 5G யின் இந்த மாடலில் 6.78 இன்ச் டிஸ்ப்ளே உடன் 1,272×2,772 பிக்சல் ரேசளுசன் வழங்குகிறது, மேலும் இந்த போனில் 1,400 நித்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 144Hz நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் வருகிறது, மேலும் இந்த போனில் பவர்புல் பர்போமன்சுக்கு octa-core 4nm MediaTek Dimensity 7300 Max 5G சிப்செட் வழங்கப்படுகிறது.

Realme 16 Pro 5G Harry Potter

கேமராக்களைப் பொறுத்தவரை, ரியல்மி 16 ப்ரோவில் 200 மெகாபிக்சல் (f/1.8) முதன்மை பின்புற கேமராவும், அதனுடன் 8 மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமராவும் இணைக்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தில், இந்த கைபேசியில் 50 மெகாபிக்சல் (f/2.4) செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க வேற லெவல் ஆபர் MOTOROLA யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,8,500 டிஸ்கவுண்ட்

ரியல்மி போனில் 7,000mAh டைட்டன் பேட்டரி மற்றும் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. கனெக்ஷன் விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6, புளூடூத் 5.4 மற்றும் ஒரு USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இதனுடன் இந்த போனில் IP66 + IP68 + IP69 + IP69K வாட்டர் மற்றும் டஸ்ட் ரேட்டிங் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :