உங்கள் தகவல்களை ஹேக்கர்கள் திருடுகிறார்கள் நினைத்தால் இந்த 4 விஷயம் தெரிஞ்சிக்கோங்க.

HIGHLIGHTS

பாதுகாப்பு திருட்டு, சமூக அடையாள திருட்டு போன்ற பல்வேறு வகையான திருட்டுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொபைல் மற்றும் இன்டர்நெட் பேங்கிங்கிற்கு உங்கள் தனிப்பட்ட மொபைல் அல்லது லேப்டாப்பை மட்டும் பயன்படுத்தவும்

ஈமெயில், சமூக ஊடகங்கள் அல்லது எஸ்எம்எஸ் மூலம் பெறப்படும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்கவும்.

Online Fraud Safety Tips, Cyber Fraud: இந்த டிஜிட்டல் யுகத்தில், ஹேக்கர்கள் அல்லது குற்றவாளிகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பெயர், மொபைல் எண், இமெயில் அட்ரஸ் மற்றும் வங்கி விவரங்கள் திருடி தவறாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சுமார் 36% இந்தியர்கள் நிதி பாதுகாப்பு திருட்டு, சமூக அடையாள திருட்டு போன்ற பல்வேறு வகையான திருட்டுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆன்லைனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது மற்றும் சில முக்கியமான விஷயங்களை பின்பற்றுவது அடையாள திருட்டு அபாயத்தைக் குறைக்க உதவும். சமீபத்தில், மகாராஷ்டிரா சைபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து ஒரு ட்வீட்டில், சில நடவடிக்கைகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

Cyber Crime: இவை 4 முக்கியமான படிகள்

1) மொபைல் மற்றும் இன்டர்நெட் பேங்கிங்கிற்கு உங்கள் தனிப்பட்ட மொபைல் அல்லது லேப்டாப்பை மட்டும் பயன்படுத்தவும்.

2) உங்கள் தனிப்பட்ட டிவைஸ் இல் சமூக ஊடகங்கள் அல்லது தனிப்பட்ட சுயவிவரத்தில் உள்நுழைந்து ஒவ்வொரு முறையும் கவனமாக வெளியேறுங்கள்.

3) ஈமெயில், சமூக ஊடகங்கள் அல்லது எஸ்எம்எஸ் மூலம் பெறப்படும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்கவும்.

4) தனிப்பட்ட தகவல்களை கேட்கும் எந்த ஒரு போரம் ஆன்லைனில் நிரப்பும் போது கவனமாக இருங்கள்.

நீங்கள் ஆன்லைன் மோசடி அல்லது தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்துவதில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், உங்கள் எல்லா அக்கௌன்டிலிருந்து இரண்டு காரணி அங்கீகாரத்தை இயக்கவும், வலுவான பாஸ்வேர்டு உருவாக்குவது மற்றும் உங்கள் நிதி அறிக்கைகளை கண்காணிக்கவும். தனியுரிமை மற்றும் பாதுகாப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Https உடன் தொடங்கும் ஒரு வலைத்தளத்திற்கு எப்போதும் செல்லுங்கள், இதைச் செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருட கூடிய போலி வலைத்தளங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். உங்கள் Social Media அக்கௌன்ட், வங்கி மற்றும் கிரெடிட் கார்டு அறிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க அல்லது சில விஷயங்கள் எப்போதும் நினைவில் வைக்கப்பட வேண்டும்.

நீங்கள் ஏதேனும் தவறு அல்லது வித்தியாசத்தைக் கண்டால், நீங்கள் cybercrime.gov.in போர்ட்டலில் புகார் செய்யலாம் அல்லது சைபர் கிரைம் (Cyber Crime) தொடர்பான புகாருக்கு 155260 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :