சிங்கிள் சார்ஜில் 101 கிலோமீட்டர் ஓட கூடிய Ola எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்.
ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகிய 2 தயாரிப்புகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் மீது மக்களுக்கு மோகம் அதிகமாகவிட்டது.
ஓலா நிறுவனம் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு தனது மூவ் ஓஎஸ் 3 மற்றும் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகிய 2 தயாரிப்புகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
Surveyஓலா நிறுவனம் கேப் பிஸ்னஸிலிருந்து
எப்பொழுது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிற்குள் இறங்கியதோ அப்பொழுது முதல் இந்தியாவில் எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் மீது மக்களுக்கு மோகம் அதிகமாகவிட்டது. இந்நிறுவனம் கடந்தாண்டு வெளியிட்ட ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரை மக்கள் அதிகம் விரும்பினர். இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங்கும் துவங்கியது. யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் இந்த ஸ்கூட்டரை புக் செய்தனர்.
ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உலகில் பெரும் புரட்சியே செய்கிறது என்று சொன்னால் மிகை ஆகாது. அந்த அளவிற்கு ஓலா ஸ்கூட்டர்கள் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரது மனதிலும் சென்று சேர்ந்து விட்டது. இன்று எலெக்டரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஓலா தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஓலா எஸ்1 ஸ்கூட்டரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. எஸ்1 ப்ரோவை விட சில மாறுதல்களுடன் குறைந்த விலையில் எஸ்1 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி இந்த ஸ்கூட்டரையும் விற்பனைக்குக் கொண்டு வந்தது.
இந்நிலையில் ஓலா நிறுவனம் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு தனது புதிய தயாரிப்பு ஒன்றை இன்று (22ம் தேதி) வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது. இதற்கான நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள கோரமங்கலாவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஓலா நிறுவனம் மூவ் ஓஎஸ்3 -யை அறிமுகப்படுத்தலாம், குறைந்த விலையில் மற்றொரு ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தலாம் எனப் பலர் பல எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சி ஆன் லைன் மூலம் நடத்தப்பட்டது. இதில் பேசிய ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவேஷ் அகர்வால் ஆலா நிறுவனத்தின் ஓலா மூவ் ஓஎஸ் 3 குறித்து விவரித்தார். இதில் முக்கிய அப்டேட்டாக. ப்ராக்ஸிமிட்டி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்கூட்டரின் உரிமையாளர் ஸ்கூட்டர் அருகே வந்தால் அது தானாக அன் லாக் ஆகிவிடும். தள்ளிச் சென்றால் மீண்டும் லாக் ஆகிவிடும்.
இது போக இந்த ஸ்கூட்டரின் லைட்கள் ஸ்கூட்டரில் ஒலிக்கும் பாடல்களுக்கு ஏற்ப மாறி மாறி எரியும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது போக இந்த ஓஎஸ்களில் விட்ஜெட் உள்ளிட்டபல முக்கிய அம்சங்கள் இருக்கிறது. இது போக இந்த ஸ்கூட்டரில் ஹைப்பர் சார்ஜிங் சப்போர்ட் இருக்கிறது.
இந்த சார்ஜரில் 15 நிமிடம் சார்ஜ் போட்டாலே 50 கி.மீ வரை பயணிக்கலாம். அதாவது கிட்டத்தட்ட ஒரு நிமிடம் சார்ஜ் போட்டால் 3 கி.மீ வரை பயணிக்கலாம்.
இந்த மூவ் ஓஎஸ் வரும் அக்டோபர் 25ம் தேதி பீட்டா வெர்ஷன் வெளியிடப்படுகிறது. இது வரும் டிசம்பர் மாத துவங்கத்தில் மற்ற அனைத்து எஸ்1 ஸ்கூட்டர்களுக்கும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது போக எஸ்1 ஸ்கூட்டர்களில் இனி சென்டர் ஸ்டாண்ட் மற்றும் லேடீஸ் ஃபுட் ரெஸ்ட் ஸ்டாண்ட் ஆகியவற்றைப் பொருத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்த ஸ்கூட்டரைவாங்கியவர்கள் இதைத் தனியாக வாங்கி பொருத்திக்கொள்ளலாம். இதை ஓலா ஆப்
இன்று முதல் ஓலா நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களைக் கவர இலவசமா ட்ரையலை அறிவித்துள்ளது. அதன்படி இந்த வாகனம் வாங்க விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த வாகனத்தை வாங்கி 24 மணிநேரம் அவர்கள் டெஸ்ட் செய்து கொள்ளலாம். இது முதற்கட்டமாக 20 நகரங்களில் மட்டும் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. நவம்பர் 7ம் தேதிக்குள் 40 நகரங்களுக்கு இந்த வசதி விரிவாக்கம் செய்யப்படும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
