Xiaomi புதிய ஸ்மார்ட்போன் டிசைனிற்கான காப்புரிமையை விபித்தித்து;ள்ளது

Xiaomi புதிய ஸ்மார்ட்போன் டிசைனிற்கான காப்புரிமையை விபித்தித்து;ள்ளது

சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் டிசைனிற்கான காப்புரிமையை பெற சீன காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்து இருக்கிறது. இந்த டிசைன் கொண்டு ஸ்மார்ட்போன்களில் வாட்டர்ஃபால் ரக டிஸ்ப்ளேக்களை பொருத்த முடியும். இந்த காப்புரிமை ஏப்ரல் 3 ஆம் தேதி சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

இது ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் சுமார் 60 சதவீதம் வரை ஸ்கிரீன் இருக்கும். வாட்டர்ஃபால் டிஸ்ப்ளே என்பது வளைந்த ஸ்கிரீன் ஆகும். இது ஸ்மார்ட்போனின் பக்கவாட்டு பகுதி வரை நீளும்.காப்புரிமை விவரங்களின் படி சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர்ஃபால் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்பதை உணர்த்துகிறது. 

புதிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சியோமி நிறுவனம் 2019 செப்டம்பர் மாத வாக்கில் விண்ணப்பித்து இருந்தது. டிசைன் மட்டுமின்றி வாட்டர்ஃபால் டிஸ்ப்ளேவினை வித்தியாசமாக பயன்படுத்தும் நோக்கில் சியோமியின் புதிய காப்புரிமை விண்ணப்பம் அமைந்துள்ளது. 

 ஆப்டிமல் ஸ்கிரீன் பகுதியை சியோமி பயன்படுத்த பிரத்யேக யுஐ டிசைன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவின் கீழ் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.ப்ரோடோடைப் போனில் பக்கவாட்டு பகுதிகளில் நேவிகேஷன் கண்ட்ரோல் மற்றும் ஸ்டேட்டஸ் ஐகான் இன்டர்ஃபேஸ் காணப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo