Xiaomi யின் BLACK SHARK 2 கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போ அறிமுகம் மற்றும் விற்பனை என்று உங்களுக்கு தெரியுமா.

Xiaomi யின் BLACK SHARK 2 கேமிங்  ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போ அறிமுகம்  மற்றும் விற்பனை என்று  உங்களுக்கு  தெரியுமா.
HIGHLIGHTS

இந்தியாவில் மே 27 ஆம் தேதி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனை சியோமி அறிமுகம் செய்கிறது.

இன்ஸ்டாகிராமில் ப்ளிப்கார்ட் தளத்தின் புதிய விளம்பரத்தில் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இடம்பெற்று இருக்கிறது

சியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மக்கள்  மத்தியில் ஷார்க் 1 மொபைல் அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்தியாவில் மே 27 ஆம் தேதி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனை சியோமி அறிமுகம் செய்கிறது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் ப்ளிப்கார்ட் தளத்தின் புதிய விளம்பரத்தில் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இடம்பெற்று இருக்கிறது. இது புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வெப்சைட்டில் விற்பனை செய்யப்பட இருப்பதை உறுதி செய்திருக்கிறது. இதே விளம்பரத்தில் கூகுள் மற்றும் போகோ உள்ளிட்ட பிராண்டுகளும் இடம்பிடித்து இருக்கிறது. இந்தியாவில் சியோமி நிறுவனம் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களுடன் சேர்ந்து வேலை செய்து வருகிறது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போன்  இரு தளங்களிலும் வரலாம் என தெரியப்படுகிறது.

மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2340 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அட்ரினோ 640 GPU மற்றும் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்டிருக்கிறது. புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனில் லிக்விட் கூல் 3.0 தொழில்நுட்பம் மற்றும் ஹீட்-கண்டக்டிங் காப்பர் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் அதிக சுடாகாமல் பார்த்துக் கொள்ளும். இதுதவிர புதிய ஸ்மார்ட்போனில் ட்ரூவியூ டிஸ்ப்ளே சப்போர்ட் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் எலைட் கேமிங் வழங்கப்பட்டுள்ளது.

பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 4000 Mah . பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo