XIAOMI மினி புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

HIGHLIGHTS

சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

ஐபோன் 12 மினி அறிவிக்கப்பட்டதும் சியோமி இதேபோன்ற மாடலை வெளியிட திட்டமிட்டது.

சியோமியின் எல்3 மற்றும் எல்3ஏ மாடல்கள் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகும்

சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் அளவில் சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
 
முன்னதாக ஐபோன் 12 மினி அறிவிக்கப்பட்டதும் சியோமி இதேபோன்ற மாடலை வெளியிட திட்டமிட்டது. எனினும், அசுஸ் நிறுவனம் சென்போன் 8 அறிமுகம் செய்து சியோமியை பின்னுக்கு தள்ளியது. இதைத் தொடர்ந்து எல்3 மற்றும் எல்3ஏ எனும் மாடல் நம்பர்கள் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள் கடந்த ஆண்டு வெளியாகின. 

சியோமியின் எல்3 மற்றும் எல்3ஏ மாடல்கள் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என தெரிகிறது. சமீபத்தில் ரெட்மி நிறுவன பொது மேலாளர் லு வெய்பிங் சிறிய ஸ்கிரீன் கொண்ட பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் பற்றி வெய்போவில் பேசியிருந்தார்.

சியோமி நீண்ட காலமாக உருவாக்கி வரும் இரு ஸ்மார்ட்போன்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் எல்3 மாடல் நம்பர் கொண்டு உருவாகி வரும் ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :