Xiaomi நிறுவனம் அதன் ரெட்மி Y3 ஸ்மார்ட்போனை ஏப்ரல் 24 அறிமுகம் செய்யும்..!

HIGHLIGHTS

Xiaomi நிறுவனம்  அதன்  ரெட்மி Y3 ஸ்மார்ட்போனை  ஏப்ரல்  24 அறிமுகம் செய்யும்..!

சியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் புதிய ரெட்மி Y3 ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி Y3 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அறிமுக தேதியுடன் ஸ்மார்ட்போனின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் டாட் நாட்ச் ரக டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. முன்னதாக சியோமி அறிமுகம் செய்த ரெட்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இதே போன்ற டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருந்தது.

இதுதவிர புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் P2i நானோ கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், இரண்டு நாட்கள் பேக்கப் வழங்கும் 4000 Mah  பேட்டரி வழங்கப்படலாம்.

இந்தியாவில் ரெட்மி  வை3 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile