அசத்தலான அம்சங்களுடன் சியோமி ரெட்மி Y2 இந்தியாவில் Rs 9,999 வெளியிட்டது

HIGHLIGHTS

Xiaomi Redmi Y2 இரட்டை கேமரா மற்றும் ஸ்னாப்ட்ரகன் 625 இந்தியாவில்அறிமுகம்செய்யப்பட்டது அதன் ஆரம்ப விலை Rs 9,999 வைக்கப்பட்டுள்ளது

அசத்தலான அம்சங்களுடன் சியோமி ரெட்மி Y2 இந்தியாவில் Rs  9,999 வெளியிட்டது

சியோமி நிறுவனத்தின் ரெட்மி Y2  ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி S 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதற்க்கான நேரடி நிகழ்வை நாம்  நேற்று டெல்லியில் பார்த்தோம் அதன் லைவ் அறிமுகத்தை நான்  உங்களிடம் எங்களது டிஜிட் தமிழ் பேஸ்புக் இணைத்துள்ளேன் 

5.99 இன்ச் HD பிளஸ் 18:9 எஸ்பெக்ட் ரேஷியோ  டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, MIUI 9, 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா, LED ஃபிளாஷ். AI பியூட்டி அம்சம், ஆட்டோ HDR  பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம், ஃபேஸ் அன்லாக், டூயல் சிம் ஸ்லாட், 3080 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி வை2 சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி, 1.25μm பிக்சல், PDAF, f/2.2
– 5 எம்பி பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3080 எம்ஏஹெச் பேட்டரி

அறிமுக சலுகைகள்

சியோமி ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் எலிகன்ட் கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் டார்க் கிரெ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.9,999 மற்றும் 4 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் அமேசான், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் ரெட்மி Y2 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.1800 உடனடி தள்ளுபடி, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 240 ஜிபி கூடுதல் டேட்டா, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு அறிமுக தினத்தில் வாங்கும் போது ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile