Redmi Note 9 சிறப்பம்சங்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.

Redmi Note 9 சிறப்பம்சங்கள்  இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.
HIGHLIGHTS

புதிய ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ 80 பிராசஸர் வழங்கப்படும்

சியோமி நிறுவனம் கடந்த மாதம் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருந்தது. எனினும், ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவில்லை. 

சமீபத்திய தகவல்களின் படி ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க நான்கு கேமரா செட்டப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுதவிர 6.43 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி 1080×2340 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 4920 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது.

தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி சியோமி நிறுவனம் விரைவில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் TENAA வலைதளத்தில் லீக் ஆகியிருக்கிறது. ஏற்கனவே இதே ஸ்மார்ட்போன் சீனாவின் 3சி சான்றளிக்கும் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருந்தது குறிப்பித்தக்கது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் பக்கவாட்டில் இல்லாமல் பின்புறமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த சீரிஸ் மற்ற இரு ஸ்மார்ட்போன்களை போன்று ரெட்மி நோட் 9 மாடலிலும் பன்ச் ஹோல் வடிவமைப்பு வழங்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ 80 பிராசஸர் வழங்கப்படும் என்றும் இது 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைர்ரும் என தெரிகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம்.

தற்போதைய புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவின் மேல்புறம் இடதுபக்கத்தில் பன்ச் ஹோல் காணப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா சென்சாரும், முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo