48MP கேமரா உடன் மே 20 அறிமுகமாகும் XIAOMI REDMI NOTE 7S

HIGHLIGHTS

, Xiaomi இதில் 48 எம்.பி. கேமரா வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

மே 20 ஆம் தேதி அறிமுகமாகிறது’

48MP கேமரா உடன்  மே 20 அறிமுகமாகும்  XIAOMI REDMI NOTE 7S

Xiaomi நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மிகவும் அசத்தும் வகையில் இருந்தது  அதனை தொடர்ந்து ரெட்மி நோட் 7S என்ற ஸ்மார்ட்போனினை இந்தியாவில் மே 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக Xiaomi அறிவித்து இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. அதில், ‘நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் மே 20 ஆம் தேதி அறிமுகமாகிறது’ என தெரிவித்துள்ளது. 

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79 பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இதுதவிர இந்த கேமராவின் ப்ரோ மோட் பயன்படுத்தி 48 எம்.பி. தரத்திலும் புகைப்படம் எடுக்க முடியும். இத்துடன் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா கேமராவும் 13 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7S  ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை என்ற போதும், இதில் 48 எம்.பி. கேமரா வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. சியோமி சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் ரெட்மி நோட் 7S  ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. + 5 எம்.பி. பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சியோமி நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவித்து இருந்தது. அந்த வகையில் ரெட்மி நோட் 7S ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றனxiaomi-redmi-note-7-pro-launching-in-india-on-20th-may-will-come-with-48mp-camera

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo