Xiaomi யின் அடுத்த ஃபிளாக்ஷிப் Mi Mix 3 எப்போ அறிமுகம்னு தெரியுமா…!

HIGHLIGHTS

சியோமி நிறுவனம் தனது Mi மிக்ஸ் 3 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அக்டோபர் 25-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

Xiaomi யின்  அடுத்த ஃபிளாக்ஷிப் Mi Mix 3 எப்போ  அறிமுகம்னு  தெரியுமா…!

புதிய ஸ்மார்ட்போனின் அறிமுக விழா சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற இருக்கிறது. அறிமுக தேதியை உறுதிப்படுத்தும் படத்தில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் ஸ்லைடு-அவுட் வடிவமைப்பு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சியோமி நிறுவனம் தனது Mi மிக்ஸ் 3 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அக்டோபர் 25-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. 

சியோமி Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 3D ஃபேஸ் அன்லாக் வசதி, பெரிய FHD + AMOLED டிஸ்ப்ளே, 90% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஏ.ஐ. டூயல் பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

எனினும் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வசதி கொண்ட மாடல் ஸ்பெஷல் எடிஷன் வடிவில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட Mi 8 ஸ்மார்ட்போன் எக்ஸ்புளோரர் எடிஷன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் புதிய ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி இடம்பெற்றிருக்கும் என சியோமி முன்னதாக வெளியிட்ட புகைப்படத்தில் தெரியவந்தது. தற்சமயம் சியோமி நிறுவனம் 5ஜி கனெக்டிவிட்டி வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என அறிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம் வரை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile