சியோமி Mi A2 ஜூலை 24 தேதி அறிமுகமாகும்…!

HIGHLIGHTS

சியோமி நிறுவனம் ஸ்பெயின் நாட்டில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஜூலை 24-ம் தேதி மாட்ரிட் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் புதிய சியோமி சாதனம் சர்வதேத சந்தையில் அறிமுகமாகபடுத்த இருக்கிறது

சியோமி Mi A2  ஜூலை 24 தேதி  அறிமுகமாகும்…!

சியோமி நிறுவனம் ஸ்பெயின் நாட்டில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஜூலை 24-ம் தேதி மாட்ரிட் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் புதிய சியோமி சாதனம் சர்வதேத சந்தையில் அறிமுகமாக இருப்பதை அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஸ்பெயின் விழாவில் சியோமி நிறுவனத்தின் MI A2 ஸ்மார்ட்போனை வெளியிடப்படலாம் என்றும் இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த Mi 6X ஸ்மார்ட்போனின் சர்வதேச மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://static.digit.in/default/7920fe96ced46ff5001499952fb372f69372511b.jpeg

சமீபத்தில் இன்டர்நெட்டில் லீக் ஆன வீடியோவில் Mi A2 ஸ்மார்ட்போனில் Mi 6X போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்றும் இதில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் இடம்பெறும் என்றும் தெரியவந்தது. எனினும் இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

சியோமி Mi A2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட் 
– அட்ரினோ 512 GPU
– 6 ஜிபி LPDDR 4x ரேம், 64 ஜிபி மெமரி
– 6 ஜிபி LPDDR 4x ரேம், 128 ஜிபி மெமரி
– 4 ஜிபி LPDDR 4x ரேம், 64 ஜிபி மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல்
– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்
– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல் சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், இன்ஃப்ரா-ரெட் சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0

https://static.digit.in/default/9845f8579c7c55e8b8bc67aa59bbbe5da8a59d99.jpeg

சியோமி Mi A2 ஸ்மார்ட்போன் 6X போன்றே பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை அறிமுக நிகழ்வில் தெரியவரும். புதிய சியோமி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையை தொடர்ந்து இந்தியாவில் ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo