பிப்ரவரி 20 அறிமுகமாகும் Xiaomi Mi 9 ஸ்மார்ட்போன்

HIGHLIGHTS

iaomi Mi 9 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை சீனாவில் பிப்ரவரி 20 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்தது

பிப்ரவரி 20 அறிமுகமாகும் Xiaomi Mi 9 ஸ்மார்ட்போன்

சியோமியின் தலைமை செயல் அதிகாரியான  Lei Jun Mi 9 ஸ்மார்ட்போனின் போப்ட்டோ ஒன்று வெளியிட்டிருக்கிறார்,  Xiaomi Mi 9  ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை சீனாவில் பிப்ரவரி 20 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஸ்மார்ட்போனின் பேக் பேனல் புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது. இதில் ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் எஃபெக்ட் வழங்கப்பட்டிருக்கிறது. முன்னதாக இதேபோன்ற அம்சம் ஹூவாய் மேட் 20 ஸ்மார்ட்போனிலும் இடம்பெற்றிருந்தது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Mi 9 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், 48 எம்.பி. சோனி IMX486 பிரைமரி கேமரா, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.31,335) முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய Mi 9 ஸ்மார்ட்போனில் பிரத்யேக நிறத்தை பெற லேசர் ஹாலோகிராஃபிக் வழிமுறை மற்றும் டபுள்-லேயர் கோட்டிங் பயன்படுத்தப்பட்டதாக சியோமி தெரிவித்துள்ளது. புதிய Mi 9 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றில் வழக்கமான சென்சார், டெப்த் சென்சார் மற்றும் அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo