108MP பிரைமரி கேமரா கொண்ட Xiaomi Mi 10 மற்றும் Mi10Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்.

108MP  பிரைமரி கேமரா கொண்ட Xiaomi Mi 10 மற்றும் Mi10Pro  ஸ்மார்ட்போன் அறிமுகம்.

சியோமி நிறுவனத்தின் புதிய Mi 10 மற்றும் Mi 10 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 வழங்கப்பட்டுள்ளது.

Xiaomi Mi 10 / Mi 10 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.67 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ AMOLED 19.5:9 HDR10 + 90Hz டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
– அட்ரினோ 650 GPU
– 8 ஜி.பி. LPPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
– 12 ஜி.பி. LPPDDR5 ரேம், 256 ஜி.பி. / 512 ஜி.பி. UFS 3.0 மெமரி
– டூயல் சிம்
– MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 108 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, 8P லென்ஸ் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சென்சார், 1.4um 
– 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS
– 20 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– Mi 10- 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் QC 4+ / PD3.0 வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
– 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
– Mi 10 ப்ரோ- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 50 வாட் QC 4+ / PD3.0 வயர், 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
– 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்

ஸ்மார்ட்போனின் பின்புறம் 3டி கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹை-ரெஸ் ஆடியோ வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. சாம்சங் சென்சார், 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 20 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சியோமி Mi 10 ஸ்மார்ட்போனில் 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் Mi 10 ப்ரோ மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 50 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை:-

சியோமியின் Mi 10 ஸ்மார்ட்போன் டைட்டானியம் பிளாக், ஐஸ் புளூ மற்றும் பீச் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 40,920) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 43,990) என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 48,080) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி Mi 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்டாரி புளூ மற்றும் பியல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 51,150) என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 5499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 56,270) என்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை 5999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 61,370) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo