மீடியாடெக் உடன் சேர்ந்து அடுத்து கேமிங் ஸ்மார்ட்போனை கொண்டு வரும் Xiaomi.

HIGHLIGHTS

புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் புதிய ஹீலியோ G 90D பிராசஸர் வழங்கப்படும் என சியோமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மீடியாடெக் உடன் சேர்ந்து அடுத்து  கேமிங் ஸ்மார்ட்போனை கொண்டு வரும் Xiaomi.

புதிய கேமிங் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி புதிதாக கேமிங் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  மீடியாடெக் ஹீலியோ ஜி90டி மற்றும் ஜி90 பிராசஸர்கள் அறிவிக்கப்பட்டதும், சியோமியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் புதிய ஹீலியோ G 90D பிராசஸர் வழங்கப்படும் என சியோமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை சியோமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்துள்ளது. சியோமி துணை தலைவரும் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குனர் புதிய ஸ்மார்ட்போன் அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டனர்.

சியோமி வெளியிட்ட தகவல்களில் பிளேயர்கள் தினமும் 42 நிமிடங்கள் கேமிங் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்திய கேமிங் துறையில் சுமார் 2.2 கோடி கேமர்கள் இருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கேமிங் துறை 100 கோடி அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியிருக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி90டி சிப்செட் ஆக்டா-கோர் சி.பி.யு. கொண்டிருக்கிறது. 0 ஜி.பி. LPDDR4 ரேம் வசதி கொண்ட முதல் மீடியாடெக் சிப்செட் ஆகும்.இது ARM கார்டெக்ஸ்-A76 மற்றும் கார்டெக்ஸ்-A55 பவர் கோர்களை பயன்படுத்துகிறது. இத்துடன் 800 மெகாஹெர்ட்ஸ் மாலி G76 GPU கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile