Xiaomi மற்றும் Leica உடன் கை கோர்த்துள்ளது Xiaomi 12 Ultra வில் அசத்தலான கேமரா கிடைக்கும்.

HIGHLIGHTS

Xiaomi ஜெர்மன் கேமரா தயாரிப்பு நிறுவனமான Leica உடன் ஒரு கூட்டாண்மையை அறிவித்துள்ளது

லைகா நிறுவனம் Huawei, Panasonic, Nokia மற்றும் Sharp போன்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

சியோமியின் முதல் போன் சியோமி 12 அல்ட்ராவாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

Xiaomi ஜெர்மன் கேமரா தயாரிப்பு நிறுவனமான Leica உடன் ஒரு கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இந்த கூட்டணியின் கீழ் முதல் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும். முன்னதாக லைகா நிறுவனம் Huawei, Panasonic, Nokia மற்றும் Sharp போன்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. OnePlus மற்றும் Oppo ஆகியவை OnePlus 10 Pro மற்றும் Oppo Find X5 போன்ற ஸ்மார்ட்போன் தொடர்களுக்காக ஸ்வீடிஷ் புகைப்பட நிறுவனமான Hasselblad உடன் கூட்டு சேர்ந்துள்ளன. லைக்கா பிராண்டுடன் சியோமியின் முதல் போன் சியோமி 12 அல்ட்ராவாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டாண்மையில், இரு நிறுவனங்களும் மொபைல் இமேஜிங் பற்றி ஒரே மாதிரியான யோசனைகளைப் பகிர்ந்துகொள்வதாகவும், மொபைல் இமேஜிங் சகாப்தத்தில் அதிக தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் ஆப்டிகல் செயல்திறன் மற்றும் புகைப்பட அனுபவத்தை தொடர்ந்து ஆராய்வதற்காக எதிர்நோக்குவதாகவும் Xiaomi கூறுகிறது. இந்த கூட்டாண்மை Xiaomiயின் இமேஜிங் உத்திக்கு வலுவான ஊக்கத்தை அளிக்கும் என்று Xiaomi CEO Lei Jun கூறினார்.

Leica  தலைமை நிர்வாக அதிகாரி மத்தியாஸ் ஹெர்ஷ் கூறுகையில், "முதல் கூட்டாக உருவாக்கப்பட்ட இமேஜிங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இரு நிறுவனங்களின் சிறந்த முன்னோடி முன்னேற்றங்களை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். விதிவிலக்கான படத் தரம் மற்றும் கிளாசிக் லைக்காவுடன் மொபைல் புகைப்படத்தில் தனித்துவமான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். விளைவு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும்."

Xiaomi 12 Ultra  எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சம்

லீக் அறிக்கையின்படி, Snapdragon 8+ Gen 1 ப்ரோசெசர் Xiaomi 12 Ultra யில் கிடைக்கும். இது தவிர, இந்த போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கும். Xiaomi இன் இந்த ஃபோன் 6.6 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 4860mAh பேட்டரியுடன் வழங்கப்படலாம். Sony IMX989 ஐ போனில் பிரைமரி சென்சராக காணலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :