வாயை பிளக்க வைக்கும் விலையில் Xiaomi 17T ஸ்மார்ட்போன் அறிமுகம், 6,500mAh பேட்டரி மற்றும் பவர் புள் கேமரா இருக்கும்

HIGHLIGHTS

Xiaomi இன்று இந்தியாவில் அதன் புதிய Xiaomi 17T போனை அறிமுகம்

இந்த போனில் MediaTek's Dimensity 8500-Ultra ப்ரோசெசர் மற்றும் 6,500mAh பேட்டரி கொண்டிருக்கும்

தன் விலை சுமார் ரூ,60,000 பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டது

வாயை பிளக்க வைக்கும் விலையில் Xiaomi 17T ஸ்மார்ட்போன் அறிமுகம், 6,500mAh பேட்டரி மற்றும் பவர் புள் கேமரா இருக்கும்

Xiaomi இன்று இந்தியாவில் அதன் புதிய Xiaomi 17T போனை அறிமுகம் செய்ததும இந்த போனில் MediaTek’s Dimensity 8500-Ultra ப்ரோசெசர் மற்றும் 6,500mAh பேட்டரி கொண்டிருக்கும் மேலும் இந்த போன் ஒரு ஹை எண்டு பட்ஜெட்டில் வருகிறது, அதாவது இதன் விலை சுமார் ரூ,60,000 பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டது மேலும் இந்த போனில் விலை மற்றும் சுவாரஸ்யமான அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Xiaomi 17T விலை தகவல்

Xiaomi 17T போனின் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வகையின் ஆரம்ப விலை ரூ,59,999 மற்றும் 12GB RAM + 512GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,64,999 ஆகும்.

ஆனால் இந்த போனின் அறிமுக சலுகையாக ரூ,5,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் உடன் இந்த போனை வெறும் ரூ,54,999 மற்றும் ரூ,59,999க்கு வாங்கலாம் அதாவது இந்த போனின் விற்பனை ஜூன் 30 அன்று Xiaomi யின் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் amazon மற்றும் பல ரீடைளர் கடைகளில் வாங்கலாம்.

இதை தவிர xiaomi யின் இந்த போனை Violet, Blue, Opal White, மற்றும் Black கலரில் வாங்கலாம்.

Xiaomi 17T சிறப்பம்சம்.

Xiaomi 17T யின் அம்சங்களை பற்றி பேசினால், 6.59-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் 3,500 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் இது Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது. சியோமி 17T, MediaTek’s Dimensity 8500-Ultra பிராசஸர் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மாலி-ஜி720 ஜிபியு (GPU) மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட், 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 4.1 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Xiaomi யின் இந்த போனில் 3D IceLoop கூலிங் சிஸ்டம் நீங்கள் எவ்வளவு நேரம் கேமிங் விளையாடினாலும் சூடகது மேலும் கேமிங் மற்றும் ஹை இன்ட்டேன்சிட்டி டாஸ்க் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Motorola Edge 70 pro+ போன் அறிமுகம் Dolby Atmos வேற லெவல் சவுண்ட்

மேலும் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை Leica-ப்ரேண்டேட் மூன்று கேமரா செட்டப் உடன் 50MP லைட் பியுசியன் 800 ப்ரைமரி கேமரா உடன் 50MP 5x பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் உடன் 120x டிஜிட்டல் ஜூம் 120x மற்றும் 12MP அல்ட்ரா வைட் என்கில் கேமரா வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் செல்பிக்கு 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

சியோமி 17T, 67W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3- இல் இயங்குகிறது , மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட்களும், ஆறு ஆண்டுகளுக்குப் பாதுகாப்புப் பேட்ச்களும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர கனேக்டிவிட்டிக்கு 5G, Wi-Fi 7, Bluetooth, NFC, GPS, மற்றும் a USB Type-C port வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile