Xiaomi 13 சீரிஸ் புதிய அறிமுக தேதி Mi Store ஸ்க்ரீன்ஷாட்டில் லீக்.

Xiaomi 13 சீரிஸ்  புதிய அறிமுக தேதி Mi Store ஸ்க்ரீன்ஷாட்டில்  லீக்.
HIGHLIGHTS

Mi Store செயலியில் உள்ள ஸ்கிரீன்ஷாட்களின்படி Xiaomi 13 சீரிஸ் டிசம்பர் 11 ஆம் தேதி அறிமுக செய்ய உள்ளது.

இந்த நிகழ்வில் MIUI 14, Xiaomi Watch S2, Buds 4 மற்றும் Xiaomi Mini Host ஆகியவை அறிமுகம் செய்யப்படும்.

Xiaomi இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு தேதியை வெளியிடவில்லை.

Xiaomi 13 சீரிஸ் வெளியீடு, முதலில் சீனாவில் டிசம்பர் 1 ஆம் அறிமுக தேதி திட்டமிடப்பட்டது,, ஆனால் சீனாவின் முன்னாள் தலைவர் ஜியாங் ஜெமினின் மரணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. Xiaomi இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு தேதியை வெளியிடவில்லை என்றாலும், Weibo யில் சுற்றி வரும் Mi ஸ்டோர் செயலியின் ஸ்கிரீன் ஷாட்கள் Xiaomi 12 டிசம்பர் 11 ஆம் தேதி அறிமுகமாகும் , அது ஞாயிற்றுக்கிழமை வரும். வெளியீட்டு நிகழ்வு உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு நடைபெறும் என்று படம் காட்டுகின்றன.

இந்நிகழ்ச்சியில் MIUI 14, Xiaomi Watch S2, Buds 4 மற்றும் Xiaomi Mini Host ஆகியவை அறிமுகப்படுத்தப்படும், இது நிறுவனத்தின் முதல் டெஸ்க்டாப் PC ஆகும். இந்த பொருட்கள் சில இந்தியாவிற்கும் வரக்கூடும் ஆனால் தேதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை .

Xiaomi 13 series சிறப்பம்சம்.

சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ மாடல்களில் இந்த பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. சியோமி 13 மாடலில் 6.2 இன்ச் FHD+ 120Hz OLED ஸ்கிரீன், சியோமி 13 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் சாம்சங் 2K E6 AMOLED வளைந்த ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

சியோமி 13 ப்ரோ மாடலில் 1-இன்ச் சோனி IMX989 சென்சார், சியோமி 13 மாடலில் 50MP சோனி IMX8 சீரிஸ் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இரு மாடல்களிலும் OIS சப்போர்ட் வழங்கப்படுகிறது. வெளியீட்டுக்கு முன் புதிய ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

கேமராக்களைப் பொறுத்தவரை, Xiaomi 13 ஆனது பின்புறத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டிருக்கும், OIS மற்றும் LED ஃபிளாஷ் கொண்ட 50MP Sony IMX989 சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் மேக்ரோ யூனிட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ சேட்களுக்கு முன்பக்கத்தில் 32MP ஸ்னாப்பருடன் கைபேசி அனுப்பப்படலாம். Xiaomi 13 ஆனது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,700mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

கனெக்டிவிட்டி விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6, புளூடூத் 5.3, GPS, NFC மற்றும் ஒரு USB டைப்-சி போர்ட் சார்ஜ் மற்றும் டேட்டா ஒத்திசைவு ஆகியவை அடங்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo