பன்ச் ஹோல் கேமராவுடன் VIVO Z1 PRO ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 14,990ரூபாயில் அறிமுகம்

பன்ச் ஹோல் கேமராவுடன் VIVO Z1 PRO ஸ்மார்ட்போனின்  ஆரம்ப விலை  14,990ரூபாயில்  அறிமுகம்
HIGHLIGHTS

இந்தியாவில் விவோZ1 Pro ஸ்மார்ட்போனின் வி்ற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் விவோ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ஜூலை 11 ஆம் தேதி துவங்குகிறது

Vivo  இந்தியாவில் இன்று அதன்  Vivo Z1 Pro ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் இதன் முக்கிய அம்சம் என்றால் இதில்  ட்ரிப்பில் கேமரா மற்றும் பன்ச் ஹோல்; கேமராவுடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போனின்  ஆரம்ப விலை  14,990ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.மற்றும் இதன் முதல் விற்பனை ஜூலை 11 அன்று விற்பனை செய்யப்படும்  விவோ நிறுவனத்தின் புதிய Z1 Pro  ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது

விற்பனை தேதி மற்றும் அறிமுக சலுகை

விவோZ1 Pro  ஸ்மார்ட்போன் சோனிக் புளு, சோனிக் பிளாக் மற்றும் மிரர் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,990 என்றும் டாப் எண்ட் மாடலான 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் விவோZ1 Pro  ஸ்மார்ட்போனின் வி்ற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் விவோ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ஜூலை 11 ஆம் தேதி துவங்குகிறது. புதிய ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 750 வரை தள்ளுபடி பெற முடியும். இத்துடன் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

VIVO Z1 PRO  சிறப்பம்சங்கள்:

– 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD . பிளஸ் 19.5:9 எல்.சி.டி. ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 712 10 என்.எமம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி (UFS 2.1)
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி (UFS 2.1)
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஃபன்டச் ஒ.எஸ். 9 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.78, சோனி IMX499 சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. 120° வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
– 2 எம்.பி. கேமரா, f/2.4
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
– 5000 Mah  பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

இத்துடன் 6.53 இன்ச் ஃபுல் HD  பிளஸ் LCD . ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ்., 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் கேமராசென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் 4D கேமிங் அனுபவம் வழங்கப்படுகிறது..பட்ஜெட் விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் விவோ Z1 Pro  ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்பட்டுள்ளன.

இது கேமின் போக்கிற்கு ஏற்ப ஸ்மார்ட்போனை வைப்ரேட் செய்யும். பிளாஸ்டிக் பேக் மற்றும் கிரேடியண்ட் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் விவோ இசட் 1 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 Mah பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo