விவோ நிறுவனத்தின் V9 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக விவோ V9 Pro ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் உடன் இந்தோனேசியாவில் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது .
Survey
✅ Thank you for completing the survey!
இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் V9 Pro ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் HFD பிளஸ் 19:9 2.5D கர்வ்ட் கிளாஸ் டிஸ்ப்ளே, நாட்ச், 1.75 mm மெல்லிய பெசல்கள் மற்றும் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த ஃபன்டச் OS. 4.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்னாப்டிராகன் 660 AIE கொண்டிருக்கும் V9 Pro ஸ்மார்ட்போனிலும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதில் போட்டோக்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. போர்டிரெயிட் அம்சம் மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா, AI செல்ஃபி லைட்டிங் மற்றும் பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
விவோ வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் விவோ V9 Pro அமேசான் வெப்சைட்டில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile