Vivo V50 Elite Edition ஸ்மார்ட்போன் vivo TWS 3e இயர்பட்ஸ் உடன் அறிமுகம் டாப் பர்போமான்ஸ் பாருங்க
V50 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது
இது vivo V50 Elite Edition என்று அழைக்கப்படுகிறது
இது 12GB RAM மற்றும் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.
Vivo நிறுவனம் பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட V50 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது , இது vivo V50 Elite Edition என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு எடிசனில் , கஸ்டமர்களுக்கு பாக்ஸில் vivo TWS 3e இயர்பட்களும் வழங்கப்படுகின்றன, அவை 30dB ANC (ஆக்டிவ் நோய்ஸ் கேன்சிலேசன்) சப்போர்ட் செய்கிறது மற்றும் டார்க் இண்டிகோ நிறத்தில் வருகின்றன. இந்த இயர்பட்களின் விலை ரூ.1,899. வாருங்கள், மொபைலின் அம்சங்கள் மற்றும் விலையை விரிவாக அறிந்து கொள்வோம்.
Vivo V50 Elite Edition விலை மற்றும் விற்பனை தகவல்
Vivo V50 Elite Edition இந்தியாவில் சிங்கிள் ஸ்டோரேஜ் வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 12GB RAM மற்றும் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.41,999ஆகும். இந்த போன் ரோஸ் ரெட் என்ற சிங்கிள் நிறத்தில் வரும். மேலும், கஸ்டமர்கள் பாக்ஸில் உள்ளே டார்க் இண்டிகோ நிறத்தில் Vivo TWS 3e வாங்கலாம். தெரியாதவர்களுக்கு, இந்த இயர்பட்களின் விலை ரூ.1,899. எனவே இந்த போனுடன் நீங்கள் அதை இலவசமாகப் வழங்குகிறது .
HDFC, SBI மற்றும் Axis பேங்க் கிரெடிட் கார்டுகளுடன் ரூ.3,000 இன்ஸ்டன்ட் பேங்க் கேஷ்பேக் உள்ளது. கூடுதலாக, ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளது. பயனர்கள் Vivoவிடமிருந்து ரூ.499 உறுதி செய்யப்பட்ட பைபேக் சலுகையையும் வாங்கலாம், இது 70% பைபேக் வாராண்டி அளிக்கிறது.
Vivo V50 Elite Edition சிறப்பம்சம்.
- டிஸ்ப்ளே: Vivo V50 Elite Edition போனில் 6.77 இன்ச் FHD+ கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 480Hz டச் வேரியன்ட் வீதத்துடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 4500 நிட்ஸ் ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது , HDR10+ சப்போர்ட் மற்றும் டயமண்ட் ஷீல்ட் கிளாஸ் பாதுகாப்பைக் கொண்டுள்ளது.
- பர்போமான்ஸ் : Vivo V50 Elite Edition யில் குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 (4nm) சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில் இந்த போன் 12GB LPDDR4X ரேம் மற்றும் 512GB UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வருகிறது, இது மென்மையான பர்போமான்ஸ் மற்றும் போதுமான ஸ்டோரேஜ் இடத்தை உறுதி செய்கிறது.
- பேட்டரி மற்றும் சார்ஜிங்: இந்த போன் ஒரு பெரிய 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 90W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இதன் மூலம், பயனர்கள் நீண்ட பேக்கப் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் இரண்டையும் வழங்குகிறது .
- கேமரா அமைப்பு: இந்த போனில் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது, இதில் 50MP ப்ரைம் கேமரா (OIS மற்றும் ZEISS உடன்) மற்றும் 50MP அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. இது 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வழங்குகிறது . அதே நேரத்தில், முன்பக்கத்தில் 50MP ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது, இது Samsung JN1 சென்சாருடன் வருகிறது, மேலும் இது 4K வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.
- கனெக்டிவிட்டி : இந்த போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஃபன்டச் OS 15 யில் இயங்குகிறது. இது இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர்ப்ரின்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் USB டைப்-சி ஆடியோ சப்போர்டை கொண்டுள்ளது. இந்த போன் IP68 மற்றும் IP69 சர்டிபிகேட் வழங்குகிறது , அதாவது இது டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிச்டன்ட் பவர் கொண்டது. 5G (SA/NSA), இரட்டை 4G VoLTE, Wi-Fi 6, புளூடூத் 5.4, GPS, GLONASS, கலிலியோ, QZSS மற்றும் USB Type-C 2.0 போன்ற கனெக்சன் அம்சங்கள் போனில் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க Itel யின் புதிய போன் AI அசிஸ்டன்ட் அம்சங்களுடன் வெறும் ரூ,6499 யில் அறிமுகம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile