Vivo நிறுவனம் புதிய V சீரிஸ் போனான Vivo V23e 5Gயை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Vivo V23e 5G உடன் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, இது 20: 9 விகிதத்துடன் கூடிய AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. Vivo V23e 5G கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. Vivo V23e 5Gயில் MediaTek Dimensity 810 செயலி கொடுக்கப்பட்டுள்ளது. Vivo V23e 5G ஆனது Xiaomi 11i 5G, Lava Agni 5G மற்றும் Realme 9 Pro + 5G போன்ற ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும்.
Vivo V23e 5G ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.25,990. Vivo V23e 5G ஐ மிட்நைட் ப்ளூ, சன்ஷைன் கோல்ட் நிறத்தில் வாங்கலாம். துவக்க சலுகையின் கீழ், ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுடன் 10 சதவீத கேஷ்பேக் கிடைக்கும்.
Vivo V23e 5G ஆனது Android 12 அடிப்படையிலான Funtouch OS 12 ஐக் கொண்டுள்ளது. இது 1080×2400 பிக்சல்கள் ரெஸலுசன் கொண்ட 6.44-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 810 செயலி, 8 GB வரை ரேம் மற்றும் 128 GB வரை ஸ்டோரேஜை பெறலாம் .
போனில் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன, இதில் முதன்மை லென்ஸ் 50 மெகாபிக்சல்கள். இரண்டாவது லென்ஸ் 8 மெகாபிக்சல்கள் அல்ட்ரா வைட் மற்றும் மூன்றாவது லென்ஸ் 2 மெகாபிக்சல்கள் மேக்ரோ ஆகும். செல்ஃபிக்களுக்கு, Vivo V23e 5G ஆனது 44 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.
Vivo V23e 5G ஆனது 5G, 4G LTE, டூயல் பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் v5.1, GPS / A-GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றைப் பெறும். தொலைபேசியில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. Vivo V23e 5G ஆனது 44W FlashCharge ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4050mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.