Vivo V20 2021 இந்தியாவில் அறிமுகம், சிறப்பம்சம் மற்றும் விலை தகவல் அறிக.

HIGHLIGHTS

Vivo V20, 2021 ஸ்மார்ட்போன் இந்திய விலை அறிவிக்கப்பட்டது

புதிய Vivo V20, 2021 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 24,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வி20 2021 ஸ்மார்ட்போன் இந்திய விலை அறிவிக்கப்பட்டது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி20 போன்றே காட்சியளிக்கிறது.
 
அந்த வகையில் விவோ வி20 2021 ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் FHD பிளஸ் 1080×2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்,  8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி இரண்டாவது கேமரா,  2 எம்பி மோனோ சென்சார்,  44 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பன்டச் ஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10,  டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் விவோ வி20 2021 பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் புதிய விவோ வி20 2021 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 24,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி நிறங்களில் கிடைக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :