விவோ வின் புதிய ஸ்மார்ட்போன் டூயல் பன்ச் ஹோல் டிசைன் உடன் வரும்.

விவோ வின் புதிய ஸ்மார்ட்போன் டூயல் பன்ச் ஹோல் டிசைன் உடன் வரும்.

விவோ நிறுவனத்தின் வி19 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய விவோ வி19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. முன்னதாக விவோ வி19 ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் விவோ வி19 ஸ்மார்ட்போன் டூயல் பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.எனினும், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் விவோ வி19 இந்திய வேரியண்ட் சற்றே வித்தியாசமானதாக இருக்கும் என தெரியவந்துள்ளது. 

விவோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கும் தகவல்களில் விவோ வி19 ஸ்மார்ட்போனில் சூப்பர் நைட் செல்ஃபி, ஆரா ஸ்கிரீன் லைட் மற்றும் சூப்பர் வைடு ஆங்கில் போன்ற விசேஷ கேமரா அம்சங்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட்போனின் முன்புறம் டூயல் பன்ச் ஹோல் வலதுபுறத்தில் காணப்படுகிறது. புதிய விவோ வி19 ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இணையத்தில் லீக் ஆன தகவல்களில் விவோ வி19 ஸ்மார்ட்போனில் நான்கு பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. இத்துடன் AMOLED ஸ்கிரீன், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர விவோ வி19 கேமரா மாட்யூல் L வடிவத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo