Vivo T5 Lite launch date display and some key specs released
Vivo இன்று அதன் புதிய Vivo T5 Lite போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் AI Creation அம்சம் கொண்டிருக்கும். இதில் Vivo DocMaster,Google Gemini மிலிட்டரி கிரேட் போன்ற பல அம்சங்கள் கொண்டுள்ளது இதனுடன் இந்த போனில் 6500Mah பேட்டரியுடன் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்களின் தகவல் பார்க்கலாம் வாங்க.
Vivo T5 Lite 5G ஸ்மார்ட்போனின் அறம்ப விலை 4GB + 128GB-ரூ,19,999, 6GB + 128GB ஸ்டோரேஜ் விலை-ரூ,21,999 மற்றும் 6GB + 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,24,999 ஆகும் ஆனால் இந்த போனின் அறிமுக ஆபராக ரூ, 1,500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் செய்யப்பட்டு இந்த போனை வெறும் ரூ,18,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற நன்மையும் பெறலாம் மேலும் இந்த போன் ஜூலை 22 அன்று விற்பனைக்கு வருகிறது இதை Flipkart மற்றும் அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டிலிருந்து வாங்கலாம்.
Vivo T5 Lite 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் (6.74) இன்ச் கொண்ட LCD டிஸ்ப்ளே உடன் (1600×720) பிக்ஸல் ரெசளுசன் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1200 nits பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது இதனுடன் இதில் லகான் பாதுகாப்புக்காக TUV Rheinland சர்டிபிகேஷன் பெற்றுள்ளது.
இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், இந்த போனில் MediaTek Dimansity 6300 5G ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் 4GB + 128GB, 6GB + 128GB மற்றும் 6GB + 256GB வரையிலான ரேம் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதன் மூலம் எளிதாக இதன் ஸ்டோரேஜ் 2TB வரை அதிகரிக்க முடியும், இதை தவிர இந்த போன் Android 16 (OriginOS 6.0) கீழ் இயங்குகிறது
இதையும் படிங்க சத்தமில்லாமல் 8000mah பேட்டரி கொண்ட பவர்புல்லான Realme Narzo 100x 5G அறிமுகம் AI அம்சங்கள் நம்மை மெய் மறக்க செய்யும்
இந்த போனின் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 50MP மெயின் Sony IMX852 / LYT505C Sensor) மற்றும் 0.08MP கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இதில் f/1.8 (Main) + f/3.0 அப்சட்ஜர் மற்றும் பின்புறத்தில் LED ப்ளாஷ் சப்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் செல்பிக்கு முன்பக்கத்தில் 5MP கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இதில் f/2.2 அப்ரட்ஜர் வழங்கப்படுகிறது.
இப்பொழுது பேட்டரி பற்றி பேசினால், இந்த போனில் 6500mAh பேட்டரியுடன் 44Wப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த போனில் செக்யூரிட்டிக்கு சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனின் டைமென்ஷன் 167.4 × 77.1 × 8.39 mm மற்றும் இதன் இடை 209g இருக்கிறது இதனுடன் இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP65 ரேட்டிங் வழங்கப்படுகிறது. மேலும் கனேக்டிவிட்டிக்கு Dual SIM, 5G, 4G LTE, 3G, 2G ஆகியவை வழங்கப்படுகிறது.